வலுவடைகிறது வடமேற்கு பருவமழை.. சிவப்பு நிறமானது புதுச்சேரி கடல்.. தெறித்து ஓடிய மக்கள்..
புதுச்சேரி: தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் நிலையில், சென்னை, புதுச்சேரி கடல்களில் புது புது மாற்றங்கள் தென்படுகின்றன.. இதை பார்த்து பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.. அதிலும், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது..

தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று அதாவது ஆகஸ்ட் 17ம் தேதி உருவாகவிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாகும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தாமதம்: அதேபோல, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதேபோல, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்: அதுமட்டுமல்லாமல், கடலோர பகுதிகளில் சூறாவளிகள் சுழன்று வீசப்போவதால், மீனவர்களும் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், புதுச்சேரி கடல் கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது.. இரவு நேரங்களில் கடல் கொந்தளிப்பு அதிகமாகவும் தென்படுகிறதாம்.
அதுமட்டுமல்ல, புதுச்சேரி கடல்பகுதியில் கடந்த 2 நாட்களாகவே, கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாகவே கொந்தளித்து வருவதுடன், கடலின் நிறமும் சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறதாம்.
சிவப்பு கலர்: குறிப்பாக, புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடல் பகுதியில், காலை முதலே சிவப்பு நிறமாக காட்சி அளித்து கொண்டிருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த தகவல் காட்டுத்தீ போல, புதுச்சேரி முழுவதும் பரவிவிடவும், ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் புதுச்சேரி பீச்சுக்கு படையெடுத்து வந்துவிட்டனர்.. கடலின் நிறம் சிவப்பாக இருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.. பிறகு, தங்கள் செல்போனிலும் வீடியோ எடுத்தனர்.. சிவப்பு கடல் முன்பு நின்றுக்கொண்டு சிலர் செல்பிகளை எடுத்து கொண்டனர்.
நிறம் மாறியது: திடீரென கடலின் கலர் மாறிவிட்டதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுன், கடலில் இறங்கி யாரும் நிற்கவோ குளிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது.. மேலும், கடற்கரைக்கு வரும் பொதுமக்களை கண்காணிக்க, போலீஸாரும் கடற்கரையில் ரோந்து பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேற்றுதான் சென்னை மெரினாவில், சுழல் காற்று பயங்கரமாக வீசியது.. திடீரென வந்த சூழல்காற்று காரணமாக, அப்படியே வானுயரத்துக்கு மணல் பறந்தது.. இதை பார்த்த அங்கிருந்த மக்கள், அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.. இப்போது, புதுச்சேரி பீச்சின் நிறம் மாறி இருப்பது, அதிர்ச்சியை தந்து வருகிறது.. எனினும், இந்த கடல் நிற மாற்றத்துக்கு என்ன காரணம் என்று உடனடியாக தெரியவில்லை.. அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications