புரட்டியெடுத்த மழையால் விக்கிரவாண்டி ஹைவேயில் பாய்ந்த வெள்ளம்.. ஊர்ந்து சென்ற வாகனங்கள்!
விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக விக்கிரவாண்டியில் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. விடிய விடிய இடைவிடாது கொட்டிய கனமழையால் பல இடங்களில் வெள்ள நீர் கடல் போல காட்சியளிக்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையிலும் வெள்ளம் பாய்ந்தோடியதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளகியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29 ஆம் தேதி மதியம் புயலாக மாறியது. இந்த ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் புதுச்சேரி-மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கத்தொடங்கியது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து புதுச்சேரியில் மழை பெய்யத் தொடங்கியது.

குறிப்பாக நேற்று முன்தினம் இரவு மரக்காணம் பகுதியை புயல் நெருங்கிய போது சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. 70 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புயல் கரையை கடந்த பின்னரும் அதன் கோரத்தாண்டவம் நீடித்தது. இதனால் புதுவையில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது.
அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அதி கனமழை, விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. புயல் கரையை கடந்த போது சூறாவளி காற்று வீசியதுடன் கனமழையும் பெய்தது. இதனால், விழுப்புரத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. விழுப்புரம் பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. நேற்று காலையும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
புயல் கரையை கடந்த பிறகும் காற்றின் வேகம் குறையாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து நேற்று மாலை 6 மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலத்தில் 51 செ.மீ. மழையும், திண்டிவனத்தில் 37 செ.மீ. மழையும் பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையிலும் செண்டர் மீடியனை உடைத்தபடி வெள்ளம் பாய்ந்தோடியது.
தமிழகத்தின் மிக முக்கியமான இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடி சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த விக்கிரவாண்டி வி.சாலை அருகில் தான் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் விஜய்யின் தவெக மாநாடு நடைபெற்றது கவனிக்கத்தக்கது. விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்கு வெள்ள பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
விழுப்புரம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செமீ மழை பதிவாகியது. புதுச்சேரி நகரில் 49 செமீ மழையும், புதுக்கண்ணில் 45 செமீ மழை, திருக்கனூரில் 43 செமீ மழை, கடலூரில் 18 செமீ, சென்னை மீனம்பாக்கத்தில் 11 செமீ மழை பதிவாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகத்தில் தலா 20 செமீ மழை பதிவாகியது. திருக்கழுக்குன்றம் 18 செமீ, தாம்பரத்தில் 15 செமீ, செய்யூரில் 15 செமீ, மாமல்லபுரத்தில் 13 செமீ மழை பதிவானது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications