இதெல்லாம் வேற லெவல் யோசனை.. சூப்பர் ஐடியாவை களமிறக்கிய ஸ்டாலின்.. மகிழ்ச்சியில் 4 மாவட்டங்கள்.. ஆஹா
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் மக்கள் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு பல விதமான முகாம்களை, சேவைகளை செய்து வருகிறது. இன்று தமிழ்நாடு அரசு தொடங்க போகும் முகாம் ஒன்று மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
மிக்ஜாம் புயலை தொடர்ந்து சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு.. தற்போது பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வெள்ளம் இன்றி காணப்படுகிறது. அதேபோல் சாலையின் உட்பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது.

ஆனால் ஒரு சில ஏரியாக்கள் இன்னும் வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவில்லை. மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், ஐடி ஏரியா பகுதிகள் மொத்தமாக இன்னும் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. இந்த பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்கவில்லை. இப்போதும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கே வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளம் வடியாத பகுதிகள்: கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.
மீளும் சென்னை: மேலும் இது 2015ஐ விட மோசமான வெள்ளம். 2015ஐ விட மோசமான மழை. ஆனாலும் சென்னை மறுநாளே வேகமாக மீண்டு வந்தது. பல ஏரியாக்கள் மிக வேகமாக மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தது. சென்னை இப்படி சட்டென எழுந்து நிற்க ஒரே காரணம்.. இந்த வடிகால் அமைப்புகள்தான்.
வெள்ள பாதிப்பு: சென்னையில் வெள்ளத்தால் மக்கள் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு பல விதமான முகாம்களை, சேவைகளை செய்து வருகிறது. இன்று தமிழ்நாடு அரசு தொடங்க போகும் முகாம் ஒன்று மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
நேற்று சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதில் புதிய சான்றிதழ் வழங்கும் முகாம் நடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மாணவர்களின் சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தால் பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் இணைந்து அவர்களுக்கு கட்டணமின்றி சான்றிதழ்கள் வழங்கப்படும் முகாம் நடத்தப்பட்டது.
சூப்பர் அறிவிப்பு: இந்த நிலையில் இன்று மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர்கள், சக்கர நாற்காலி போன்றவற்றை பழுது நீக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் உதவி உபகரணங்களை பழுது நீக்க தொலைபேசி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு
வட சென்னை 9499933589, 044 - 29993612 | தென் சென்னை 9499933470, 044 - 24315758 । திருவள்ளூர் - 9499933496, 044-27662985 | காஞ்சிபுரம்,- 9499933582,044 - 29998040 செங்கல்பட்டு - 9499933476, 044 - 27431853
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications