இப்படி கொடுக்கலாமா? விசாரித்த ஸ்டாலின்! வீடு தேடி வரும் ரூ.6000.. நிவாரணத்தில் நடக்க போகும் மாற்றம்
சென்னை: தென் மாவட்டங்களில் கொடுக்கப்படும் வெள்ள நிவாரண தொகை தொடர்பான முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.

இந்த புயல் காரணமாக சென்னையில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல் பலத்த சேதமும் ஏற்பட்டது.
தென் மாவட்ட வெள்ளம்: இதை தொடர்ந்து சில நாட்களில் தென் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வார தொடக்கத்தில் தென் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தூத்துக்குடியில் இயல்பை விட 68%மும், திருநெல்வேலியில் 135%மும், கன்னியாகுமரியில் 103%மும், தென்காசியில் 80%மும் கூடுதலாக பதிவாகியுள்ளது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கின.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.
நிவாரணம் அறிவிப்பு: தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்
அதேபோல் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கும் ரூ. 6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விசாரணை: தற்போது சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நிவாரண பணம் ரொக்கமாக ரேஷனில் வழங்கப்படுகிறது . இதை நேரடியாக வங்கிகளில் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது.
இந்த நிலையில்தான் த்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கும் ரூ. 6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணம் ரேஷனில் வழங்கப்படாமல்.. ரேஷன் சார்பாக வீடு வீடாக சென்று நேரடியாக வழங்கப்படலாம் என்கிறார்கள். தென் மாவட்ட மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு ஆறுதல் கூறும் விதமாக.. அலைச்சல்களை குறைக்கும் விதமாக நேரடியாக சென்று பணம் கொடுக்கலாமா என்ற திட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து இருக்கிறாராம்.
நிவாரண நிதியை ரொக்கமாக தருவது ஏன்?: தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் நேரடியாக போடப்படும் நிலையில் வெள்ள நிவாரணம் மட்டும் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படுகிறது. இதற்கு பின் முக்கியமான காரணம் உள்ளது.
நிறைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை, பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன, எனவே ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் வங்கி கணக்கில் கொடுத்தால் அதற்கான விவரங்களை பெற வேண்டும். ஓடிபி மூலம் சரிபார்க்க வேண்டும்,. நிறைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்பதால் புதிதாக உருவாக்க வேண்டும். அதோடு இல்லாமல்.. வங்கியில் பணம் போட்டால் மினிமம் பேலன்ஸ் என்று பணம் எடுத்துக்கொள்ளப்படும். இந்த மினிமம் பேலன்ஸ் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே நேரடியாக கைகளில் பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications