12 டூ 20 செமீ மழை வாய்ப்பு.. ரெட் அலர்ட் வாபசுக்கு நடுவே தமிழகத்தில் இன்று, நாளை ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தமிழகத்துக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாறாக இன்றும், நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் சில இடங்களில் குறைந்தபட்சம் 12 சென்டிமீட்டர் முதல் அதிகபட்சமாக 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யலாம் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை என்பது தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மெல்ல மெல்ல பெய்ய தொடங்கி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் சாரல் மழை என்பது கடந்த 2 நாட்களாக அவ்வப்போது பெய்து வருகிறது.

இந்நிலையில் தான் விரைவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்துக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் காலநிலை மாற்றத்தால் ரெட் அலர்ட் என்பது வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனாலும் ரெட் அலர்ட்டுக்கு பதில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட்டை பொறுத்தமட்டில் ஒரு நாளில் குறைந்தபட்சம் 115.6 மில்லி மீட்டர் (11.5 சென்டிமீட்டர்) முதல் 204.4 மில்லி மீட்டர் (20 சென்டிமீட்டர்) வரையிலான மழைப்பொழிய வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழலில் தான் இன்றும், நாளையும் தமிழகத்தின் சில இடங்களின் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 12-20 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை, நாளை மறுநாள் மற்றும் ஜுன் 25 ஆகிய 3 நாட்களும் தமிழகத்துக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அதேபோல் கேரளா மற்றும் தெற்கு உள்கர்நாடகா பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் இந்த பகுதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications