Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெப்ப அலையால் உயரும் வெப்ப நிலை.. 5 நாட்கள் அலர்டாக இருக்கனும் மக்களே..! இல்லைனா அவ்வளவுதான்.!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் மிகக் கடுமையான வெப்ப அலை பரவ கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. குறிப்பாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஒடிசாவிலும், ஏப்ரல் 17ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்திலும் பரவி வரும் வெப்ப அலை தென்னிந்தியாவிலும் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளது.

தமிழகத்தின் கடந்த சில நாட்களாக வழக்கம் போல் அக்னி வெயில் தொடக்கத்திற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் காலை முதலே அதிக வெயில் இருப்பதால் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர். மேலும் வெயில் மரணங்களும் அதிகரித்துள்ளது.

IMD Warns Heat wave to severe heat wave conditions likely in Tamilnau for 5 days

தினமும் 30 முதல் 35 டிகிரி செல்சியல் வரை வெப்பநிலை உள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் 5 நாட்கள் வெப்ப அலை பரவுவதோடு, வெயில் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்ப அலை: இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கிழக்கு இந்தியா மற்றும் தெற்கு தீபகற்ப இந்திய பகுதிகளான மேற்கு வங்கம், கர்நாடகா, ஒடிசா, தமிழகம், பிஹார், சிக்கிம், தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும்.

எங்கெங்கே?: கடலோர ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கோவா, கேரளா, அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலைகளால் உண்டாகும் காற்றின் ஈரப்பதம் அசௌகரியத்தை உண்டாக்கலாம். சமவெளி பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாகவும், கடலோரப் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ், மற்றும் மலைப் பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும் போது வெப்பஅலை ஏற்படும் என எச்சரித்துள்ளது.

செய்ய வேண்டியவை: அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்கியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே வெளியில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது தொப்பி மற்றும் குடையை பயன்படுத்துவது அவசியம். இதனால் வெளியில் செல்லும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

செய்யக் கூடாதவை: வெயில் காலத்தில் வயதானவர்கள் , குழந்தைகள் , நோய்வாய்ப்பட்டவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக அவர்கள் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.வெயில் உச்சத்தில் இருக்கும் 11 மணி முதல் மாலை 4 மணி வரை முடிந்தளவு வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கலாம். மேலும் வெயில் காலங்களில் தேவையில்லாமல் அதிக அளவு உடல் உழைப்பைத் தருவது, அல்லது வெறும் காலுடன் வெளியே செல்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+