‛டமால் டுமில்’.. சென்னை உள்பட 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழை!
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை, நாகை உள்பட பல மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் தமிழ்நாட்டில் பருவமழை என்பது தீவிரமாகி வருகிறது.
இதனால் தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை 3 மணிநேரம் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை அல்லது லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை , திருவாரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய 10 மாவட்டங்களிலும் இடியுடன் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
மாறாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, ராமநாதாபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications