ஆடுஜீவிதம் வெயில்.. ஆடிப்போன இந்தியா.. ஆப்பிரிக்காவில் கூட இப்படி இல்லையாம்! ஷாக் ரிப்போர்ட்
சென்னை: உலகின் மிக வெப்பமான பகுதிகளில் ஒன்றாக இருக்கும், ஆப்பிரிக்கா பகுதியை விட, இந்தியாவில் வெப்பம் அதிகமாக பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி வருகிறது. வெப்பம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் வெப்ப அலையின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. இதுகுறித்து எச்சரித்திருந்த வானிலை மையம்.

இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு பகுதிகள் மற்றும் வடமேற்கு பகுதியை தவிர மற்ற பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறியிருந்தது. அதாவது, வங்க கடலை ஒட்டியுள்ள பகுதிகள், அசாம், மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த முறை வெப்பம் இயல்பாகதான் இருக்கும்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பீகார் மேற்கு ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை தீவிரமாக இருக்கும் என்று எச்சரித்திருந்தது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் நேற்று, 15 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்திருந்தது.
அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரியும், சேலம் மற்றும் திருப்பத்தூரில் 106.8 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. வேலூரில் 106.3 டிகிரியும், நாமக்கல்லில் 105.8, திருச்சி, தருமபுரியில் 105.2, திருத்தனியில் 104.7, தஞ்சாவூர், கரூர் பரமத்தியில் 104, மதுரை விமான நிலையம் 103.6, கோவை, 103.2, சென்னை மீனம்பாக்கம் 102.2, மதுரை நகரில் 101.4, பாளையங்கோட்டையில் 100 டிகிரியும் வெயில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், உலகின் மிக வெப்பமான பகுதிகளில் ஒன்றாக இருக்கும் ஆப்பிரிக்காவை விட, இந்தியாவில் வெயில் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் இன்று பிற்பகல் நிலவரப்படி தமிழ்நாடு கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள் மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. இதே ஆப்பிரிக்காவில், மாலி, நைஜர், சூடான், வடக்கு எத்தியோப்பியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டும்தான் வெயில் 99-102 டிகிரியை அளவில் பதிவாகியுள்ளது.
மற்றபடி, தென்னாப்பிரிக்கா, ஜாம்பியா, டான்சானியா, கென்யா, எகிப்து, லிபியா, அல்ஜீரியா உள்ளிட்ட பகுதியில் வெயில் குறைவாகதான் இருக்கிறது. வழக்கமாக இந்த பகுதிகளில் வெயில் அதிமாக இருந்து இந்தியாவில்தான் குறைவாக இருக்கும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக வெயில் பதிவாகியுள்ளது. இது தொடர்பன தெர்மல் இமேஜ் செயற்கைக்கோள் படங்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகின்றன.
வெப்பம் இப்படியே சென்றால் இந்தியாவில் வெப்பம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மறுபுறம் மின்சாரத்திற்கான நுகர்வும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே, கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் நீர் மின் உற்பத்தியானது குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications