வானத்தில் இருந்து திடீரென சரிந்து விழும் பறவைகள்.. இந்தியாவில் நிலை ரொம்ப மோசம்! பதறும் ஆய்வாளர்கள்
டெல்லி: கோடையில் நமது நாட்டின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் நமது நாட்டில் அதீத வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், இதனால் சுமார் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இவை மனிதர்களை மட்டும் பாதிப்பதில்லை. மற்ற உயிரினங்களையும் கூட கடுமையாக பாதிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
கோடை காலம் ஒவ்வொரு ஆண்டும் மிக மோசமாக மாறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

அதீத வெப்பம்: குறிப்பாக மதிய நேரங்களில் வெளியே கூட வர முடியாத சூழல் நிலவியது. இந்த கோடை காலம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதீத வெப்ப அலையால் இந்தாண்டு நமது நாட்டில் 40 ஆயிரம் பாதிக்கப்பசட்டுள்ளனர். மேலும், இந்தாண்டு வெப்ப அலையால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் ஒரு பகுதியில் கனமழை கொட்டும் நிலையில், மறுபுறம் வெப்ப அலையால் இந்த மரணங்கள் நடந்துள்ளன.
பருவநிலை மாற்றமே இதுபோன்ற அதீத வானிலை நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். காலநிலை மாற்றத்தால் வட இந்தியாவில் பல இடங்களில் வெப்பம் சுமார் 50 டிகிரி செல்சியஸ் (122 டிகிரி பாரன்ஹீட்) ஆக உயர்ந்துள்ளது.
பறைவகள்: கடுமையான வெப்பம் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் பறவைகள் கூட வானத்தில் இருந்து விழுந்தன.. கடந்த சில வாரங்களில் மட்டும் பல பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. மருத்துவமனைகளில் வெப்ப அலையால் பாதிக்கப்படும் நோயாளிகளின் வருகை அதிகரித்தது. வெப்ப அலை பாதிப்பால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
டெல்லி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் மோசமாக இருப்பதால் நிலைமை யைாள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1 முதல் ஜூன் 18 வரையிலான காலகட்டத்தில் நமது நாட்டிில் சுமார் 40,000க்கும் மேற்பட்டோர் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக பாதிக்கப்பட்டுளளனர். மேலும், இதனால் குறைந்தது 110 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காரணம் என்ன: மேலும், நமது நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வெப்பம் அதிகரிக்க சமச்சீரற்ற வளர்ச்சியும் முக்கிய காரணமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதாவது நகர்புறங்களில் இருக்கும் அதிகளவிலான கட்டுமானங்கள், அதிகளவில் மரங்கள் வெட்டப்படுவது உள்ளிட்டவை அங்கு வெப்பத்தை அதிகரிக்கின்றன. இதுபோல கட்டுமானங்கள் அதிகரிப்பதால் குறிப்பிட்ட பகுதிகளில் மற்ற பகுதிகளை காட்டிலும் வெப்பம் அதிகமாக பதிவாகிறது.
கொட்டும் மழை: நாட்டின் ஒரு பகுதி இதுபோல அதீத வெப்பத்தால் இன்னல்களை எதிர்கொள்ளும் நிலையில், மறுபுறம் வடகிழக்கு மாநிலமான அசாமில் மழை கொட்டி தீர்க்கிறது. இடைவிடாமல் பெய்யும் மழையால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அதிகரித்தன. இதனால் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மழையால் அசாமில் சுமார் 1.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்ராவின் மிகப்பெரிய துணை நதிகளில் ஒன்றான கோபிலியில் நீர் அபாய அளவைத் தாண்டியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications