உருவாக போகுது புது காற்றழுத்த தாழ்வு பகுதி.. வரும் நாட்களில் தமிழகத்தை வைத்து செய்ய போகும் கனமழை!
சென்னை: தென் மாநிலங்களில் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு பருவமழை பெரியளவில் பெய்யவில்லை. கடந்த செப், அக். மாதங்களில் வழக்கத்தை விட மழை குறைவாகவே இருந்ததாக வானிலை மையம் தரப்பிலேயே கூறப்பட்டிருந்தது.

இருப்பினும், கடந்த சில நாட்களாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை தொடங்கிப் பல இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை மையம்: இதனால் நீர்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வரும் நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், மழை காரணமாக சில் கிளைமேட் நிலவுவதும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. இதற்கிடையே வரும் நாட்களில் எந்த மாதிரியான வானிலை நிலவும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து வளைகுடாவில் உள்ள சூறாவளி சுழற்சி இப்போது தெற்கு அந்தமான் கடல் மீது இருக்கிறது. இது தென்மேற்கு நோக்கிச் சாய்ந்து மத்திய வெப்பமண்டல நிலைகள் வரை நீண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி: இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16ஆம் தேதி மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது..
வங்காள விரிகுடாவில் இருந்து வடகிழக்கு காற்று, தென்கிழக்கு தீபகற்ப இந்தியாவின் மீது நிலவுகிறது. இதன் காரணமாக நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால், கேரளா, மாஹே, ஆந்திரப் பிரதேசம் பகுதிகளில் இன்று முதல் 15ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை இருக்கு: மேலும், வரும் நவம்பர் 14, 15 தேதிகளில் ஆந்திரா மற்றும் ஏனாம் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே ஆகிய இடங்களில் வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த 7 நாட்களைப் பொறுத்தவரை அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல நவம்பர் 13-14 தேதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடியுடன் மற்றும் மின்னல் உடன் கூடிய மழை மற்றும் நவம்பர் 13, 14ஆம் தேதிகளில் தனித்தனி இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: மேலும், மீனவர்கள் எச்சரிக்கையைப் பொறுத்தவரை நாளை நவம்பர் 14 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் மற்றும் மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடா பகுதிகள், நவம்பர் 15, 16 தேதிகளில் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் மீது காற்றின் வேகம் மணிக்கு 40-45 கி.மீ. முதல் 55 கி.மீ வரை வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என என்று கூறப்பட்டுள்ளது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications