தமிழ்நாட்டில் மாறும் வேலை நேரம்? வெயில் முடியும் வரை இனி பகலில் நோ வேலை? தமிழக அரசு ஆலோசனை?
சென்னை: கட்டுமான பணி, சாலை போடும் பணிகள் உள்ளிட்ட வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் கடுமையான பணிகளின் பணி நேரத்தை மாற்ற தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னையில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உடல் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி பலியாகி உள்ளார். உ.பியை சேர்ந்த சச்சின் மீஞ்சூர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். சென்னை மீஞ்சூர் இந்த சம்பவம் நடந்து உள்ளது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.

இவர் கட்டுமான பணியில் ஈடுபடும் போதே மயங்கி விழுந்துள்ளார். இந்த நிலையில் அவருடன் வேலை பார்த்தவர்கள் அலறியபடி அவரை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். நீண்ட நேரம் வேலை பார்த்த நிலையில் மயங்கி விழுந்து பின்னர், ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு பலியாகி உள்ளார்.
ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?: ஹீட் ஸ்ட்ரோக் என்பது கடுமையான வேலை காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு, இதயம் தொடங்கி பல்வேறு உறுப்புகள் செயல் இழப்பது ஆகும். அதிக வெப்பநிலை மற்றும் கடுமையான சூடு ஆகியவற்றுள் நீண்டகாலம் இருந்தால் உடலின் வெப்பநிலை ஒழுங்குமுறை அமைப்பு செயல் இழப்பதை குறிக்கும்.
இதன் மூலம் கடுமையான வெப்ப பக்கவாதம் மூளை, இதயம், சிறுநீரகங்கள் மற்றும் தசைகள் போன்ற முக்கிய உறுப்புகளை சேதப்படுத்தும், இது கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். வெப்ப அழுத்தத்திற்கு உடலின் பிரதிபலிப்பு அதிகரித்த இதயத் துடிப்பை உள்ளடக்கியது, இது இருதய அமைப்பைக் கஷ்டப்படுத்தும், குறிப்பாக முன்பே இருக்கும் இதய நோய்களை கொண்ட நபர்களில் ஏற்படும்.
வெப்பநிலை மோசம்: தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கும் அளவிற்கு மோசமான வானிலை நிலவி வருகிறது.
பெரும்பாலான இடங்களில் தமிழ்நாட்டில் 38-39 டிகிரி செல்ஸியஸ் நிலவி வருகிறது. மற்ற சில இடங்களில் நிலையங்களில் 42°C மற்றும் அதற்கு மேல் வெப்பநிலை நிலவுகிறது. உதாரணமாக வேலூர் :43.2°C (+4.0°C) & திருச்சி: 42.1°C (+3.7°C),. திருப்பத்தூர், திருத்தணி, தருமபுரி, மதுரை நகரம் & விமான நிலையம், பாளையங்கோட்டை, சேலம், நாகப்பட்டினம், சென்னை (எம்பிகே) மற்றும் தஞ்சாவூரில் 40-42 டிகிரி செல்சியஸ் நேற்று பதிவானது.
வேலை நேரம் மாற்றம்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் வேலை நேரத்தை மாற்ற ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கட்டுமான பணி, சாலை போடும் பணிகள் உள்ளிட்ட வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் கடுமையான பணிகளின் பணி நேரத்தை மாற்ற தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அரசு சார்பாக இதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பகலில் வெயிலில் மேற்கொள்ளப்படும் கடுமையான வேலைகளுக்கு இரவில் மாற்று நேரம் கொடுக்கலாம் என்று ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றதாம் . நீங்களும் சென்னையில் வீடு கட்டும் பட்சத்தில் இரவு நேரத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ளலாம் . இல்லையென்றால் பகலில் மேற்கொள்ளப்படும் பணிகள் மரணத்திற்கு காரணமாகலாம். கட்டுமான பணிகள் காரணமாக உங்கள் மீதும் வழக்கு பாயும் நிலை ஏற்படலாம்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications