மக்கள் சொன்ன வார்த்தை.. மீட்க போனப்ப இதுதான் ரொம்ப கஷ்டமா இருந்தது.. கனிமொழி சொன்ன பரபர தகவல்
தூத்துக்குடி: மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைக்கச் செல்ல முயற்சித்தபோது நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சி அளிப்பதாக மீட்பு பணிகளில் ஏற்பட்ட சிரமம் குறித்து கனிமொழி எம்.பி. பேட்டி அளித்துள்ளார்.
தென் தமிழ்நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் அங்கே மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இன்னும் அங்கே வெள்ளம் முழுமையாக விடியவில்லை. ஒரு சில இடங்களில் 10 அடிக்கு கூட வெள்ளம் இன்னமும் உள்ளது.

அமைச்சர்கள் சென்றனர்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லைக்கு ஏற்கனவே சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டார். அமைச்சர்கள் உடனே நெல்லைக்கு புறப்பட வேண்டும், தென் மண்டல எம்பிக்கள் தென் தமிழ்நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். அதன் அடிப்படையில் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் நெல்லைக்கு சென்று அங்கே மீட்பு பணிகளை செய்தார்.
கனிமொழி வந்தார்: இன்னொரு பக்கம் டெல்லியில் இருந்து அவசர அவசரமாக தூத்துக்குடிக்கு எம்பி கனிமொழி புயல் அன்று காலை வந்தார் . அங்கே மீட்பு பணிகளை கவனித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக அவர் மீட்பு பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். டெல்லியில் குளிர்கால கூட்டத்தொடருக்காக இருந்த கனிமொழி அவசரமாக தூத்துக்குடிக்கு வந்தார்.
அங்கே சாலைகளில் தேங்கி இருக்கும் வெள்ளத்தை பார்வையிட்டார். சாலையில் வெள்ளம் தேங்கி இருக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். இப்போதும் விடாமல் அவர் மீட்பு பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். 1 வாரம் ஆகியும் கூட அவர் களத்திலேயே இருக்கிறார்.
அதிர்ச்சி சம்பவம்: மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைக்கச் செல்ல முயற்சித்தபோது நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சி அளிப்பதாக மீட்பு பணிகளில் ஏற்பட்ட சிரமம் குறித்து கனிமொழி எம்.பி. பேட்டி அளித்துள்ளார்.
அதில், நாங்கள் மீட்க சென்ற போது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை, மழை வெள்ள எச்சரிக்கைகள் வர தொடங்கியதும், நாங்கள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைக்கச் செல்ல முயற்சித்தபோது, அவர்கள் வர மறுத்துவிட்டனர். எங்கள் மூதாதையர்கள் காலத்திலிருந்தே இங்கு வெள்ளம் வந்ததில்லை, இங்கிருந்து கிளம்புங்கள் எங்களுக்கு ஒன்றும் ஆகாது என்றார்கள். ஆனால் அப்பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது என்று மீட்பு பணிகளில் ஏற்பட்ட சிரமம் குறித்து கனிமொழி எம்.பி. பேட்டி அளித்துள்ளார்.
கனிமொழி போட்டோ டிரெண்டிங்; முதல் நாளில் இருந்து தூத்துக்குடிக்கு எம்பி கனிமொழி சென்று மீட்பு பணிகளை கவனித்து வருகிறார். அங்கே அவர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் கவனம் பெற்று வருகின்றன. அதிலும் பெரும் வெள்ளத்தில் அவர் துணிச்சலாக செய்த மீட்பு நடவடிக்கை ஒன்று பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது.
முட்டி வரை இருந்த வெள்ளத்தில் நடந்து சென்று மக்களை அவர் மீட்க உதவினார். அந்த சாலையில் வெளிச்சம் இல்லை. நல்ல இருள். அங்கே தண்ணீரும் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. எங்கே என்ன இருக்கிறது என்று தெரியாத சூழல். இப்படிப்பட்ட நிலையில் அதிகாரிகளை சேர்த்து அழைத்துக்கொண்டு அவர் துணிச்சலாக மிதந்தபடி சென்று தண்ணீரை கடந்து மீட்பு பணிகளை மேற்கொண்டார். அவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications