இதாங்க தமிழ்நாடு.. மசூதி, மதர்சாவில் தங்கலாம்! அனைத்து மதத்தினரை அழைக்கும் காயல்பட்டினம் முஸ்லிம்கள்
தூத்துக்குடி: காயல்பட்டினத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கும் நிலையில் மதர்சாவில் தங்கலாம் என முஸ்லிம் ஐக்கிய பேரவை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பின் எதிரொலியாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வீட்டில் இருக்க முடியாமல் தவிக்கும் குடும்பத்தார்களுக்கு, அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள இடங்களில் தங்க வைக்க காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "கிழக்கே சுலைமான் நகரை ஒட்டியுள்ள பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஆயிஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி மண்டபத்தில் தங்கலாம்! இங்கு தங்கியுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: சுலைமான் TNTJ : 9042869396, ஆதம் சுல்தான்: 6383514163
மஜ்லிஸில் புகாரி ஷரீஃப் சபையைச் சுற்றியுள்ள பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அச்சபை மண்டபத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்பு தொலைபேசி எண்: A.J.சொளுக்கு:9486812440
மேற்குப் பகுதியில் பெரியநெசவு தெருவின் மேற்குப் பகுதியை ஒட்டியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விசாலாக்ஷி அம்மன் கோவில் தெருவை ஒட்டி உள்ள அனைத்து சமுதாய மக்கள் ஆகியோர்களுக்கு பெரிய நெசவு தெருவில் உள்ள ஹமீதா பெண்கள் மதரசா மண்டபத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தொடர்பு தொலைபேசி எண்: ஜாகீர் உசேன்:9994097217
காயல் மத்திய பகுதியை ஒட்டியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜலாலியா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டபம் போதவில்லை என்றால் அடுத்துள்ள மெய்தீன் பள்ளி வளாகத்திலும் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்பு எண்: அபு குளவி: 9361020556, மஹ்மூத் சுல்தான்: 9500256645
மொகுதும் ஜும்மா பள்ளியை ஒட்டிய மொகுதும் மக்தப் மண்டபத்தில்,
அதை சுற்றியுள்ள பகுதிகளான பாதிக்கப்பட்ட சிவன் கோவில் தெரு, சாஹித் தம்பி தோட்டம் மற்றும் அனைத்து சகோதர சமுதாய மக்கள் அனைவரும் இங்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்பு தொலைபேசி: கைலாணி:9486655786, அன்சாரி:9043661671
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கண்ட இடத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
மற்றைய தேவைகளுக்கு பேரவையின் தொடர்பானவர்கள் உங்கள்
தேவைக்கேற்ப தொடர்பு கொள்வார்கள்.
மேலும் அவசர உதவிகளுக்கு: ஜாஹீர் - 9994097217, அப்துர்ரஹ்மான்- 81229 229 91, சம்சுதீன் - 7094161339, நஜீப் - 8608981720, மாஜா - 9677553933, ஹஸன் - 9791294093, சம்சுதீன் - 7397505484" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications