வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னையில் 2 நாட்களுக்கு மழை தொடரும்.. 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோரம் மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

நேற்று காலையில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. சென்னையிலும் நேற்று ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இன்றும் காலையிலேயே சென்னையில் மழை பெய்தது. சென்னை எழும்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, தாம்பரம், வண்டலூர் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது.
இந்த நிலையில் இன்று மழை தொடரும் என வானிலை மையம் கூறியிருக்கிறது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்றும், நாளை தமிழகத்தில் சேலம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications