அலெர்ட்! தீபாவளிக்கு அப்புறம் சம்பவம் இருக்கு.. வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராதாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே கடலோர பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியை உற்று நோக்கி வருவதாகவும் அது புயலாக மாற வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications