விடவே விடாது.. தமிழகத்தில் 30 ஆம் தேதி வரை கனமழை தான்.. அடுத்தடுத்து உருவாகும் 2 புயல்கள்?
சென்னை: மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 26 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இதேபோல் இலங்கை அருகே 48 மணி நேரத்தில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் இதுவும் புயலாக மாறலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் வரும் 28 முதல் 30 வரை மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதேபோல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று சற்று மழை குறைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. நேற்று மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது இன்று அல்லது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும், இது நாளை புதன்கிழமை புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதேபோல் இலங்கை அருகே வளிமண்டல காற்று சுழற்சி நிலவியது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது. இதுவும் அடுத்தடுத்த நாட்களில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 28 முதல் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications