கடலில் மீண்டும் “பூதம்”.. இந்தோனேசியா அருகே தொடங்கிய ஆட்டம்! தமிழகத்தில் விரைவில் 5வது சுற்று மழை
சென்னை: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளை ஒட்டி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த சுழற்சி அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சுமத்ராவை ஒட்டிய தெற்கு வங்ககடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இச்சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் தாழ்வு பகுதியாக மாறக்கூடும். தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தற்காலிக பனிப்பொழிவு நிலவும்.

வானிலை_எதிர்ப்பார்ப்பு: தமிழகத்தில் இன்று (12.12.2023) முதல் (14.12.2023) வரை மூன்று நாட்களுக்கு இரவில் குளிர்ந்த சூழலும், அதிகாலையில் பனிப்பொழிவும் காணப்படும். பகல் நேரத்தில் தெளிவான வானத்துடன் வெப்பமான சூழல் நிலவும். மழை வாய்ப்பு குறைவு, மாநிலத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைப்பொழிவை எதிர்ப்பார்க்கலாம்.
தமிழக விவசாயிகள் அடுத்த மூன்று நாட்களில் களைக்கட்டுப்பாடு, பூச்சிக்கட்டுப்பாடு, உரமிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். குளிர்கால பயிர் (மணிலா (நிலக்கடலை), சோளம், பருத்தி, உளுந்து, தர்பூசணி) விதைப்பு பணிகளை திட்டமிடும் கடலோரம் & கடலோரத்தை ஒட்டிய உள் மாவட்ட விவசாயிகள் விதைப்பு பணிகளை அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய & டெல்டா கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வயல்களில் வடிகால்களை சீர் செய்வது, கவனைகளை அகற்றுவது போன்ற பணிகளை அடுத்த 5 - 7 நாட்களில் துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 5 ஆம் சுற்று மழை தமிழகத்தில் தீவிரமடையும், குறிப்பாக கடலோரம் நல்ல மழை பெறும். டிசம்பர் 4 வது வாரத்தில் 6 ம் சுற்று மழையும் நல்ல மழைப்பொழிவை கொடுக்கும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், "தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
12.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.12.2023 மற்றும் 14.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.12.2023 முதல் 17.12.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications