மொட்டை மாடியில்.. கதறிய 2 உயிர்கள்.. ஹெலிகாப்டரில் இறங்கிய வீரர்களுக்கு ஷாக்.. நெல்லையில் திக்திக்
திருநெல்வேலி: நெல்லையில் 2 கர்ப்பிணிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நடவடிக்கை பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
தென் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்து உள்ளது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

மீட்பு பணிகள்: மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ₹9 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு 49,000 போர்வைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருச்செந்தூரில் இருந்து நேற்று முதல்நாள் சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ், நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்ட பயணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் உடனடியாக மீட்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஹெலிகாப்டர் உணவு: இதில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு என்று தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். 2 நாட்களில் 4 மாவட்டங்களில் 10,082 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
மாநில, தேசிய பேரிடர் மீட்பு படைகள் மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். நெல்லை, தூத்துக்குடியில் தலா 275 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், ஶ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் 4 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர் என்று சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிகள் மீட்பு: நெல்லையில் மட்டும் 2 கர்ப்பிணிகள் உட்பட 2500 பேர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர். இதில் இரண்டு கர்ப்பிணிகள் நெல்லையில் மொட்டை மாடியில் மீட்பு பணிக்காக காத்து இருந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் சத்தத்தை கேட்டு.. கர்ப்பிணிகள் மொட்டை மாடிக்கு வந்து.. எங்களை காப்பாற்றுங்கள் என்பது போல சிக்னல் காட்டி உள்ளனர். அவர்களின் வீடுகளின் முதல் தளம் நீரில் மூழ்கிவிட்டது. கர்ப்பிணிகள் என்பதால் உள்ளே இருப்பதும், கழிப்பறை செல்வது கடினம் ஆகி உள்ளது.
இதனால் வெளியே வர முடியாமல் அவர்கள் கடுமையாக உள்ளே சிக்கி தவித்து வந்துள்ளனர். அப்போது மொட்டை மாடிக்கு வந்து உதவி செய்யும்படி கதறி உள்ளனர். இந்த நிலையில்தான் ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் இருவரும் வெற்றிகரமாக மீட்கடப்பட்டனர்.
அமைச்சர்கள் நியமனம்: வெள்ளத்தில் மீட்பு பணிகளை செய்ய கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும். அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்ங்கம் தென்னரசு, சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும்கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆகிய அமைச்சர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி. . எஸ். ஞானதிரவியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications