சென்னை காசிமேடு கடலுக்கு கூட்டமாக ஒடிய மக்கள்.. என்னது 'போயா' வந்திடுச்சா.. மிக்ஜம் புயலால் சம்பவம்
சென்னை: கடல் சீற்றத்தால் சென்னை காசிமேடு பகுதிக்கு அடித்து வரப்பட்ட 'போயா' சாதனத்தை காண பொதுமக்கள் திடீரென அதிக அளவில் குவிந்தனர். அப்படி குவிந்த மக்களை போலீசார் பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தினர்.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும். இன்று திருவள்ளூர், தொடங்கி கடலூர் வரை பலத்த தரைக்காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மத்திய மேற்கு வங்கக்கடல் வட தமிழக கடலோரப்பகுதிகள் தெற்கு ஆந்திரா கடலூர் பகுதிகளில் கொந்தளிப்புடன் கடல் காணப்படுகிறது. 5-ம் தேதி வரையிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் தீவிர புயலாகவே மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் என்றும் கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் தான் மழை பொழிவிருக்கும். மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புதுச்சேரி கடலோர பகுதிகளிலும் தரைகாற்று இருக்கும். படிப்படியாக சென்னையில் மழை அதிகரித்து நாளை இரவு வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை கடலோர பகுதிக்கு அருகே 100 கி.மீ. தொலைவிற்கு மிக்ஜாம் புயல் நாளை காலை வரும் என்றும் அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரித்தபடியே சென்னையில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கடல் பகுதிகளில் பலத்த சீற்றம் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக சென்னை கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் போக வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை காசிமேடு பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அந்த சீற்றத்தால் 'போயா' சாதனமே கடலில்இருந்து கடற்கரைக்கு அடித்து வரப்பட்டது. இந்த போயா சாதனம் எதற்கு பயன்படும் விஷயம் என்றால், கடலில் நிலையை அறிவதற்ககாக ஆங்கர்போட்டு நிறுத்தி வைக்கப்படும் ராட்சத சாதனம் ஆகும்.
கடலின் இயல்பு தன்மை, காற்றின் வேகம், ஈரப்பதம் உள்ளிட்ட தட்பவெப்ப நிலைகள் குறித்த தரவுகளை 'போயா' எனப்படும் மிதவை சாதனத்தை கடற்கரைபகுதியில் வைப்பார்கள். அந்த சாதனத்தில் கண்காணிப்பு கேமரா, ரேடார், சூரியசக்தி பேட்டரி, கடற்கரை பகுதியை மீனவர்களை அடையாளம் காண, இரவில் ஒளிரும் மின்விளக்கு உள்ளிட்டவை வைத்திருப்பார்கள். இந்த சாதனத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும். இந்த சாதனத்தை வங்க கடல் அடித்து கொண்டு வந்து காசிமேடு கடற்கரையில் வீசியதால் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இதனிடையே போயா சாதனத்தை காண பொதுமக்கள் திடீரென அதிக அளவில் குவிந்தனர். அப்படி குவிந்த மக்களை போலீசார் பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் காசிமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications