காலையிலேயே அதிரடி.. அடுத்த 2 மணி நேரத்தில்.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு செம மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 புயல்கள் வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், சென்னையிலும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்தில் பலத்த மழை கொட்டப்போவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது,
அரபிக்கடலில் ஏற்கெனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு தேஜ் என்ற பெயரை வைக்க இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமடைந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

Moderate rain likely in 4 districts in Tamil Nadu in the next 2 hours including Chennai, Kancheepuram

மிதமான மழை: அதேபோல் வங்கக்கடல் பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 23ம் தேதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மிதமான மழையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இப்போது இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அடுத்த 2 மணி நேரத்தில், சென்னை மற்றும் சென்னையை சுற்றியிருக்கும் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை வரப்போகுதாம்.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வானிலை மையம்: அதேபோல, ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், குன்றத்தூர், தாம்பரம், வண்டலூர் பகுகளிலும் பலத்த மழை வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.. எழும்பூர், அமைந்தகரை, கிண்டி, மாம்பலம், மதுரவாயல், பூந்தமல்லி, அம்பத்தூர் பகுதிகளிலும், அடுத்த ஒரு மணி நேரத்தில் மழை பெய்ய போவதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வரும் 23ம்தேதி வரை மழை கொட்டும் என்று தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், இன்றே கனமழை சென்னையில் பெய்கிறது.

அலர்ட்: அலுவலகம் செல்வோர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், பொதுமக்களும், இந்த வானிலை அறிவிப்பினால் அலர்ட் ஆகிவருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+