அடுத்த 2 மணிநேரம் முக்கியம்.. கோவை உள்பட 6 மாவட்டங்களில் மழை கொட்டும் - சென்னை நிலவரம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல் சென்னையின் இன்றைய வானிலை நிலவரம் பற்றிய விவரமும் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தற்போது வெயில் என்பது இல்லை. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் வெயில் முற்றிலுமாக குறைந்துள்ளது. அதோடு, அவ்வப்போது லேசாக மழை பெய்து வருகிறது.

weather chennai rain

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இதமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரையிலான காலநிலை விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் சில இடங்களிலும், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம். போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்த 6 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் காலை 10 மணி வரை குடையுடன் வெளியே செல்வது நல்லது.மேலும் தலைநகர் சென்னையை எடுத்து கொண்டால் இன்றைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதகிளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியுஸ் முதல் 33 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+