வெறும் தொடக்கம் தான்.. வரும் நாட்களில் இருக்கு.. மழை குறித்து வெதர்மேன் கொடுத்த ஜில் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் சுட்டெரித்த வெயிலுக்கு பிரேக் கொடுத்து பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உள்ளது. இந்த நிலையில் இது வெறும் தொடக்கம் தான்.. வரும் நாட்களில் தான் மழை இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த கோடை வெயிலில் இருந்து மக்களுக்கு சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக நேற்று பல இடங்களில் மழை கொட்டியது. இடி மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென் மாவட்டங்களில் மழை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்தது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் விரைவாக வற்றியது. அணைகளிலும் நீர்மட்டம் மடமடவென குறைந்தது. இந்த நிலையில் தான் தகிக்கும் வெயிலுக்கு பிரேக் கொடுத்து பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உள்ளது.
வெறும் தொடக்கம் தான்: இந்த நிலையில், இது வெறும் தொடக்கம் தான்.. வரும் நாட்களில் இன்னும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று ஜில்லான அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-
"கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், திருச்சி, பெரம்பலூர் என வெப்பத்தில் தவித்த இந்த அனைத்து பகுதிகளுக்கும் சற்று நிவாரணம் கிடைக்க உள்ளது. இன்று வெறும் தொடக்கம் தான். வரும் நாட்களில் இன்னும் மழை இருக்கிறது" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:- ஏப்.14 மற்றும் 15ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்.16 முதல் 18ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பை பொறுத்த அளவில், 16ம் தேதி வரை அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.
வெப்பநிலை எப்படி?: அடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°-41° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34°-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
அடுத்த 7 நாட்கள்: அடுத்த 7 நாட்களை பொறுத்த அளவில், தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதேபோல குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்த அளவில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல, இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications