வந்துருச்சு ’ரெட்’ தக்காளி.. ஹை அலர்ட்டில் நீலகிரி! ஏதாவது அவசரம்னா இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!
சென்னை: நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கருதி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதம் துவங்கியிருக்கும் நிலையில் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் பொது மக்களை மகிழ்விக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மேல் பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை மாற்றம் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. குறிப்பாக மலைப்பகுதியில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.
ரெட் அலர்ட் காரணமாக 20 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பலத்த காற்று காரணமாக மரங்கள் விழ வாய்ப்புள்ளது. மேலும் நிலச்சரிவு உள்ளிட்டவை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் இன்று ஒரு நாள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை 05-08-2025 அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இதன் காரணமாக மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதிக அளவு மழை பொழிய வாய்ப்புள்ளதால் மண் சரிவு மரங்கள் மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் பள்ளி மாணவர்கள் நலனை கருதி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒரு நாள் மட்டும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படும்
நீலகிரி மாவட்டத்தில் மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423 - 2450034, 2450035 க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் what's app எண் 9488700588 க்கு தகவல் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications