மேக வெடிப்பு இல்லை.. நீடிக்கும் ரெட் அலர்ட்.. 39 இடங்களில் மிக அதி கனமழை.. பாலச்சந்திரன் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் 9 இடங்களில் 50 செமீ அளவிற்கு அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 39 இடங்களில் மிக அதிக கனமழை பெய்துள்ள நிலையில் 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம் - 95 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூர் - 69 செமீ, பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீ வைகுண்டம் -62 செமீ, திருச்செந்தூர் AWS - 61 செமீ, ஒட்டன்சத்திரம் - 37 செமீ, கடம்பூர் - 37 செமீ, குலசேகரன்பட்டினம் - 33 செமீ, கயத்தாறு -27 செமீ, விளாத்திகுளம் - 26 செமீ, வைப்பார் - 22 செமீ மழை பதிவாகியுள்ளது. கழுகுமலை - 19 செமீ, கோவில்பட்டி - 53 செமீ, மணியாச்சி - 42 செமீ, வேதநத்தம் - 30 செமீ மழை பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி - 61 செமீ, நாங்குநேரி - 33 செமீ மழை பதிவாகியுள்ளது. மாஞ்சோலை - 55 செமீ, ஊத்து - 50 செமீ, நாலுமுக்கு - 47 செமீ, பாளையங்கோட்டை - 44 செமீ மழை பதிவாகியுள்ளது. அம்பாசமுத்திரம் - 43 செமீ, சேரன்மகாதேவி - 41
கன்னட அணைக்கட்டு - 41, காக்காச்சி - 36 செமீ மழை பதிவாகியுள்ளது.
நம்பியார் அணை - 36 செமீ மழை, பாபநாசம் - 35 செமீ, மணிமுத்தாறு - 33 செமீ, களக்காடு - 32 செமீ, திருநெல்வேலி - 31 மழை, கொடுமுடியாறு அணை - 30 செமீ, சேர்வலர் அணை - 27 செமீ ராதாபுரம் - 27 செமீ மழை பதிவாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் - 18 செமீ, கொட்டாரம் - 18 செமீ, மையிலாடி - 30 செமீ மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் - 20 செமீ, வெம்பக்கோட்டை - 18 செமீ மழை பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் குண்டார் அணை - 51, செங்கோட்டை - 30 செமீ, கருப்பநதி அணை - 30 செமீ, கடனா அணை - 22 செமீ, ஆய்க்குடி - 21 செமீ, ராமநதி அணைப் பிரிவு - 21 செமீ, தென்காசி - 17 செமீ, சிவகிரி - 16 செமீ, சங்கரன்கோவில் - 8,அடவிநயினார் அணை - 8 செமீ மழை
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிப்பதாக கூறினார். தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக .கூறினார்.
இது மேக வெடிப்பு மழை இல்லை என்று கூறிய பாலச்சந்திரன், 24 மணி நேரத்திற்கு மேல் விடாமல் மழை கொட்டித்தீர்த்துள்ளதாக கூறினார். மழை எச்சரிக்கையை பச்சை, ஆரஞ்ச், ரெட் என மூன்று அலர்ட்தான் தர முடியும் என்று கூறிய பாலச்சந்திரன், இத்தனை செமீ மழை பெய்யும் என்று உறுதியாக கூற முடியாது என்றார். புயல் எதுவும் இல்லாமல் இப்போது அதி கனமழை கொட்டித்தீர்த்துள்ளதாகவும் கூறினார் பாலச்சந்திரன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications