வானிலை கொடுத்த டுவிஸ்ட்.. புத்தாண்டில் மழை இல்லை.. இனி மழை இந்த நாட்களில்தான்.. வெதர்மேன் நறுக்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழையை எதிர்பார்க்க வேண்டியது இல்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இனி மழை எப்போது இருக்கும் என்ற தகவலையும் பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் நாட்டில் நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை மக்களை மிரட்டி வருகிறது. போதும்டா சாமி என்று சொல்லும் அளவுக்கு தென் மாவட்ட மக்கள் சொல்லும் அளவுக்கு மழை வெளுத்து வாங்கிவிட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், இயல்பைவிட அதிக அளவு மழை பெய்ததது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் கடும் சேதம் ஏற்பட்டது.

சில நாட்களுக்கு சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீளும் முன்பே தென் மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெரு மழை பெய்து அங்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. தற்போது இந்த பாதிப்பில் இருந்து தென் மாவட்டங்களில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர். இந்த நிலையில், தென் மாவடங்களில் ஆண்டு இறுதியில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை எச்சரிகை வெளியானது.
அடுத்த 4-5 நாட்களுக்கு: இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். எனினும், தற்போது தூத்துக்குடி நெல்லை உள்பட தென் மாவட்டங்கள் அவ்வப்போது மேக மூட்டங்களும் லேசான தூறல்களும் விழுகின்றன. பெரிய அளவில் மழை எதுவும் மழை பெய்யவில்லை. இந்தநிலையில், தான் தமிழகத்தில் இனி ஜனவரி முதல் வாரம் முடியும் போது மழையை எதிர்பார்க்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழையோ கனமழையோ எதிர்பார்க்க முடியாது. ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும். எனவே அடுத்த 4-5 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. உங்கள் வழக்கமான பணிகளை செய்து கொண்டே புத்தாண்டில் அடியெடுத்து வையுங்கள்.
மேனேஜ் பண்ணிக்கலாம்: கருமையான மேகங்களை கண்டோ லேசான மழைத்துளிகளை கொண்டோ நெல்லை,தூத்துக்குடி மக்கள் அச்சப்பட வேண்டாம். சென்னை, நெல்லை, தூத்துக்குடிக்கு இந்த ஆண்டு கொஞ்சம் கடினமானதாக இருந்தது. தேவை இல்லாத நேரத்தில் மக்கள் வானிலை பற்றிய அச்சத்துடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜனவரி முதல் வாரம் முடியும் நேரத்திலும் இரண்டாவது வாரத்திலும் தான் தமிழ்நாட்டில் மழையை எதிர்பார்க்கலாம்.
அதையும் கூட பொறுத்து இருந்துதான் முடிவு செய்ய வேண்டும். மாஞ்சோலையிலும் இன்று முதல் மழை குறையத் தொடங்கும். நாட்டிலேயே மிகவும் ஸ்பெஷல் பகுதி அது. நலமூக்கு மற்றும் ஊத்து பகுதிகளில் மட்டும் வடகிழக்கு பருவ மழையில் 300 மி.மீட்டர் மழையை தாண்டி பெய்துள்ளது என்றால் நம்ப முடிகிறது. அங்கு பெய்யும் மழையை மேனேஜ் பண்ணிக்கலாம்" என்றார்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications