மழை வெளுத்து வாங்கியும் சென்னையில் எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை - மாநகராட்சி அப்டேட்!
சென்னை: சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் எங்கும் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கனமழை பெய்த போதிலும், சென்னையில் உள்ள எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. கடந்த டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, மாதவரம் அடுத்த வட பெரும்பாக்கம் சாலை, திருவொற்றியூர் ராஜாஜி நகர், வியாசர்பாடி முல்லைநகர், திரு.வி.க.நகர் மண்டலம், காந்திநகர், தேனாம்பேட்டை மண்டலம், டிரஸ்ட் புரம், அண்ணாநகர் மண்டலம் மில்லர்ஸ் சாலை, சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகர், அம்பத்தூர் தொழிற்பூங்கா, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
செங்குன்றம் பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசித்த 30-க்கும் மேற்பட்டோரை ஃபைபர் படகுகள் மூலம் பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். ஓட்டேரி பகுதியில் கனமழையால் வீடு இடிந்ததில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிட்வா புயல் வலுவிழந்த சென்னை கடற்கரை அருகே நிலைகொண்ட நிலையில், கடந்த மூன்று நாள்களாக இடைவிடாது மழை பெய்து வந்தது. தற்போது சென்னை, புதுச்சேரி இடையே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்தது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் வழக்கமான போக்குவரத்து நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கனமழை பெய்த போதிலும், சென்னையில் உள்ள எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications