குட்பை சொன்ன வடகிழக்கு பருவமழை.. ஆனாலும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: வரும் 18ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 3 நாட்கள் வரை தென் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை மூலம் தான் அதிக மழை கிடைக்கும். ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழையால் இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் மழை பெறும். எனினும், தமிழ்நாட்டிற்கு மிக குறைந்த அளவு மழையே கிடைக்கும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கணிசமான மழையை பெறும்.

நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியுடன் தென்மேற்கு பருவ மழை விலகியது. அதன்பிறகு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டிற்கு 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் மழை வடகிழக்கு பருவமழை மூலம் தான் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் இந்த மழையை பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு எப்படி இருக்குமோ என மக்கள் எதிர்பார்த்த நிலையில், போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு வெளுத்து வாங்கியது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் பெருமழை பெய்து வெள்ளக்காடாக்கியது. இந்த வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மீள்வதற்குள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது.
பருவ மழை விலகியது: இதனால், தாமிரபரணி கரையோர ஊர்களில் வெள்ளம் புகுந்து கடும் பாதிப்பை சந்தித்தது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் முடிவு பெறும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஜனவரியிலும் நீடித்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காலையில் பனிமூட்டம் அதிகரித்து வறண்ட வானிலையே நிலவியது.
பருவமழை விலகுவதற்கன சூழல் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:- 14 ஆம் தெதி முதல் 17 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். 18 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 18ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 3 நாட்கள் வரை தென் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதர பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இருந்து விலகியது. தமிழகம், புதுவை, காரைக்கால், கடலோர ஆந்திர பகுதிகளில் இருந்தும், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதியில் இருந்தும் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications