உச்சத்தை நெருங்கும் வடகிழக்கு பருவமழை! வங்கக் கடலில் மயிலிறகு! விவசாயிகள், மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: வட கிழக்கு பருவமழை 2024-ல், வரும் 23.11.2024 முதல் 27.11.2024 வரை கனமழை முதல் அதிகனமழை குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழையால் ஏற்படும் பாதிப்பை வட்டாரம். மாவட்டம் மற்றும் மாநில அளவில் கண்காணித்திட குழு அமைக்கப்பட்டு பயிர்சேத நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இப்பருவத்திற்கு. டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான உரங்களான யூரியா 53,366 மெட்ரிக் டன், டிஏபி 9,181, பொட்டாஸ் 14,196 மற்றும் காம்ப்ளக்ஸ் 24,483 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக வயல்களில் நீர் தேங்கும்பட்சத்தில், நீரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக 21 எண்கள் நீர் இறைக்கும் கருவிகள் மேலும், 805 விசையிலான மரம் அறுக்கும் கருவிகள் 60 மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் 85 மண் தள்ளும் இயந்திரங்கள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வடகிழக்கு பருவமழையின் போது கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் வெள்ள சூழ்நிலையில் நெற்பயிருக்கான மேலாண்மை நடவடிக்கைகள்:
1. மழைநீர் தேங்கும்பட்சத்தில் வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரினை வடித்து, வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்தல் வேண்டும்.
2. மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொள்ளி இடுதல் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.
3. போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன், ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமாக தெளித்தல் வேண்டும்.
4. தூர் வெடிக்கும் பருவத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட வாய்ப்புள்ளது. இதனை நிவர்த்தி செய்ய மழை நின்று, நீர் வடிந்த பிறகு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் இவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு முழுவதும் வைத்து 17 கிலோ பொட்டாசியத்துடன் கலந்து வயலில் இடுதல் வேண்டும்.
5. மழைக்காலத்தில் புகையான் பூச்சி தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் செல்லும் பொழுது வேம்பு சார்ந்த பூச்சி மருந்தாகிய அசாடிராக்டின்- 0.03% மருந்தினை வேளாண் துறையின் பரிந்துரையின்படி உபயோகப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்திட 30.11.2024 அன்று கடைசி நாள் என்பதால், விவசாயிகள் உடனடியாக பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளிலிருந்து மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று முதல் நவ.24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
மேலும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ள நிலையில், மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications