பொத்து ஊத்துது! நாளை காலை 8.30 வரை மிக கனமழை.. சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வார்னிங்!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை தற்போது வரையில் தமிழகத்தில் பெய்து வரும் நிலையில், தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மேலும், தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகளில் மழைநீர் ஓடி வருவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்கள் சேலம், விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்கள் என 25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலையில் 8 செ.மீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது.
மழை இன்று இரவு முழுவதும் தொடரக்கூடும் என்றும், காலை 8.30 மணி வரை தொடரும் என்றும் வானிலை மையம் சாரொஇல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் டிசம்பர் 2 ஆம் தேதி புயல் உருவாக உள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் டிச.2, 3 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும். அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!












Click it and Unblock the Notifications