செங்கல்பட்டு முதல் கன்னியாகுமரி வரை.. நைட்டு யாரும் வெளியே வராதீங்க! வானிலை மையம் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாலும் தமிழகத்தில் மழையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை 24 மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications