Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கிய பயணிகள்.. வாஞ்சி மணியாச்சி வரை ஹெலிகாப்டர் பயணம்.. 13 பேருந்துகள் தயார்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கனமழை வெள்ளத்தால் ரயிலில் சிக்கித்தவிக்கும் பயணிகளை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ஹெலிகாப்டரில் இருந்து வாஞ்சி மணியாச்சி வரை அழைத்து செல்லப்படும் பயணிகள் பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை செல்லும் பயணிகள் சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. காயல்பட்டினத்தில் 110 செமீ மழையும் திருச்செந்தூரில் 90 செமீ மழையும் கடந்த 2 நாட்களில் பதிவாகியுள்ளது. எங்கும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Passengers stuck in Srivaikundam train Helicopter travel to Vanchimaniyachi Station

கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் - செய்துங்கநல்லூர் இடையே உள்ள தண்டவாளத்தின் கீழ் இருந்த மண் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தண்டவாளம் எந்த வித பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டுள்ளது. இதன்காரணமாக கடந்த 17ஆம் தேதி இரவு திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில், 30 கிலோ மீட்டர் மட்டுமே கடந்த நிலையில், கனமழையின் இடையே பாதுகாப்பு காரணங்களுக்காக, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இந்த ரயிலில் சுமார் 800 பயணிகள் இருந்தனர். ரயில் மேற்கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால், இரவு முழுவதும் ரயிலிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் ரயிலில் இருந்து 300 பயணிகள் மீட்கப்பட்டு பேருந்துகள் மூலம் அருகே உள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் அவ்வழியே சாலைகளும் துண்டிக்கப்பட்டதால், ரயிலில் சிக்கிய 500 பயணிகளை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சாலை மார்க்கமாக குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்ற வாகனங்கள், மேற்கொண்டு செல்ல முடியாததால் மூன்று கிலோ மீட்டர் முன்னரே நிறுத்தப்பட்டன. ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், ரயில் பயணிகளுக்கு குடிநீர், உணவு என தங்களால் முடிந்த உதவிகளை வழங்கினர்.

இதனிடையே, ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள பயணிகள் தங்களின் நிலை குறித்து வீடியோக்களை வெளியிட்டனர். இதையடுத்து தேவையான நிவாரண பொருட்களை கொண்டு செல்ல ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை மாவட்டம் சூலூரில் இருந்து 2 டன் நிவாரண பொருட்களுடன் ஹெலிகாப்டர் ஸ்ரீவைகுண்டத்திற்கு புறப்பட்ட நிலையில், இடையே எரிபொருள் நிரப்புவதற்காக மதுரையில் தரையிறக்கப்பட்டது. அப்போது வானிலை இருட்ட தொடங்கியதால் மேற்கொண்டு ஹெலிகாப்டரை கொண்டு செல்லும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

மூன்று நாட்களாக பெருவெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஸ்ரீவைகுண்டம் தனித்தீவாக மாறியுள்ளது. இதன் காரணமாக மீட்புப் பணிகளுக்குச் செல்ல தயாராக இருந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் சென்று சேர முடியவில்லை.

இதேபோன்று உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் ரயில்வே குழுவினர் செய்துங்க நல்லூர் வழியாக சாலை மார்க்கமாக செல்ல முயன்றனர். அவர்களும் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்னதாகவே நின்று கொண்டனர்.

பயணிகள் ரயில் பெட்டிகளிலும், ரயில் நிலையத்திலும், நடைமேம்பாலத்திலும் தங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், காலை முதல் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் 6 அடி உயரத்திற்கு ஆர்ப்பரித்து சென்ற வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ளது.

இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தேங்கியிருந்த தண்ணீரும் குறையத் தொடங்கியுள்ளது. இதனால், ரயிலில் 3 நாட்களாக சிக்கித் தவிக்கும் பயணிகளை மீட்டுவிடலாம் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிவாரண பொருட்களுடன் மதுரையில் இருந்து ஹெலிகாப்டரும் சென்றுள்ளது. ஶ்ரீ வைகுண்டத்தில் மீட்கப்படும் பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அழைத்துவரப்படுகின்றனர். வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட உள்ளனர். ரயிலில் இருந்து மீட்கப்படும் பயணிகளை பேருந்து மூலம் அழைத்து செல்லவும் 13 பேருந்துகள் தயாராக உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+