ரூ.6000 நிவாரணம்.. இப்படி செஞ்சா எப்படிங்க? லிஸ்ட்டில் பெயர் இல்லாததால் ஏராளமானோர் வாக்குவாதம்!
சென்னை: வெள்ள நிவாரணமாக ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணியின்போது ரேஷன் கடை பணியாளர்களுடன் பொதுமக்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாகக் கொட்டிய கனமழை, வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ள நிலையில், தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. சென்னையில் முழுமையாகவும், மற்ற 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த 9ஆம் தேதியன்று அறிவித்தார்.
வெள்ள நிவாரணம் ரூ.6000 வழங்குவதற்காக ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் கடந்த 14ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சர்க்கரை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு இந்த நிவாரணத்தொகை இல்லை என்றும், அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், நிவாரண தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோக பணிகள் நடந்து வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. டோக்கன் விநியோகம் நடைபெற்ற பகுதிகள் மக்கள் சூழ்ந்து நின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் டோக்கன் பெற்றனர். பயனாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களுக்கு, அவர்களின் ரேஷன் கார்டு விவரங்களைச் சரிபார்த்து டோக்கன்கள் வழங்கப்பட்டன.
நிவாரண டோக்கன்கள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமானோர், ரேஷன் கடை பணியாளர்களுடம் இருந்த லிஸ்ட்டில் தங்கள் பெயர் இடம்பெறாததை அறிந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சில இடங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால், கூட்டம் அதிகம் இருந்த இடங்களில் போலீசாரும் பாதுகாப்புக்கு நின்றனர். டோக்கன் கிடைக்காதவர்கள் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டன.
நிவாரண டோக்கன் பெற நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள், லிஸ்ட்டில் தங்கள் பெயர் இல்லையென்றால் கோபப்படுவார்கள் என்பதை அரசு உணர்ந்திருக்க வேண்டும், பல மணி நேரமாக மக்களை காக்க வைத்து, உங்கள் பெயர் லிஸ்ட்டில் இல்லை, உங்களுக்கு நிவாரண தொகை கிடைக்காது எனக் கூறினால், மக்கள் கோபப்படுவது இயல்பு, முன்கூட்டியே, குறுஞ்செய்தி மூலமாக, பட்டியலில் இருக்கும் பயனாளிகளுக்கு தெரியப்படுத்தி இருக்கலாம் என்பது பலரின் குரலாக இருக்கிறது.
வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்தியதாகவும், பெருமளவில் பாதிப்பை தவிர்த்துள்ளதாகவும் கூறி வரும் தமிழக அரசு, வெள்ள நிவாரணத்தொகை வழங்கும் திட்டத்தில் இவ்வளவு குழப்பங்களை அனுமதிப்பது, அரசுக்கு எதிராக மக்களின் கோபத்தைத் தூண்டும் என்பதை அரசு உணர்ந்து, இதில் தகுந்த மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வேளச்சேரியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கி, இதனை தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும், ரேஷன் கடைகள் மூலமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி தொகை ரூ.6000 வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications