Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

13 கி.மீ. வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம்.. விடாத அடை மழை.. அவசர கால உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடக்கு, வடமேற்கு திசையில், 13 கி..மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது... புயல் உருவெடுத்துள்ள நிலையில், கனமழை கொட்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனமழையின்போது மக்களுக்கு உதவும் வண்ணம், அவசர கால உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக மாற வாய்ப்புள்ளது.

rain weather report

புயல் சின்னம்: இந்த புயல் சின்னமாக உருவெடுத்துள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை, நாகை,. புதுச்சேரி அருகே உள்ளதால் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

மழை தொடர்ந்த நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்துள்ளனர்.

தேர்வுகள் தள்ளிவைப்பு: அதேபோல, இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடத்தப்படும் மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, அழகப்பா பல்கலைக்கழ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த டிப்ளோமா தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதனிடையே, கடலோர பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை எச்சரிக்கையையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், அவசர கால உதவி எண்களையும் பொதுமக்களுக்காக வெளியிட்டு உள்ளது.

இதோ அவசர எண்கள்:

மாநில அவசரகால செயல்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, வாட்ஸ் அப் - 94458 69848

நாகை - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800 233 4233, வாட்ஸ் அப் - 8438669800

மயிலாடுதுறை - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04364-222588

திருவாரூர் - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் - 94885 47941

கடலூர் - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் 9489930520

ஆரஞ்சு அலர்ட்: முன்னதாக, தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

12 முதல் 20 செ.மீ. வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வடக்கு, வடமேற்கு திசையில், 13 கி..மீ. வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும் பல மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் தொடர்கிறது. தற்போது, 13 கிலோ மீட்டர் வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+