சென்னையில் கொட்டும் மழை.. பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் ஜில் அப்டேட்
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று வட மற்றும் தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 31 மாவட்டங்களில் காலை 8 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே மிதமான மழை பெய்து வருகிறது. நங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம், வடபழனி, அசோக்நகர், கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர், சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மெரினா நங்கநல்லூர், உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று 31 மாவட்டங்களில் காலை 8 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சேலம், நாகப்பட்டினம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications