தமிழகத்தை குளிர்விக்கப்போகும் மழை.. ஜூன் 29 வரை சில்லென்று மாறும் வானிலை.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் கடந்த வாரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக மழை பெய்து இதமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் போல வெப்பம் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்தது. தற்போது வானிலை முற்றிலுமாக மாறி மழை பெய்த பகுதிகளில் எல்லாம் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.

மே மாதத்தில் மழை பெய்த நிலையில், ஜூன் மாதத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், வரும் வாரத்தில் தமிழகத்தில் ஜூன் 9 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேபோல, தேனி, திண்டுக்கல், சென்னை ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் மழை பெய்தது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த அறிவிப்பில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
வானிலை ஆய்வு மையம் கூறியது போலவே நேற்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய கடலோரப் பகுதியில் மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) முதல் ஜூன் 29 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சோலையாறு (கோவை) 100 மி.மீ., சின்கோனா (கேவை) - 90 மி.மீ., வால்பாறை (கோவை) - 80 மி.மீ. மழை பதிவானது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சென்னை சென்ட்ரலில் 50 மி.மீ.யும், சோழிங்கநல்லூா், காசிமேடு, எண்ணூா், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ.யும், கத்திவாக்கம், ஐஸ் ஹவுஸ், தண்டையாா்பேட்டை, மணலி, ஈஞ்சம்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் 20 மி.மீ.யும் மழை பதிவானது.
மேலும், சென்னை மற்றும் புறகா் பகுதிகளில் ஜூன் 24 இல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications