10 மணிநேரத்தில் 41 செமீ.. ராமேஸ்வரத்தில் வரலாறு படைத்த மழை.. வெதர்மேன் தந்த ராமநாதபுரம் டேட்டா!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிக்குள் 10 மணிநேரத்தில் மொத்தம் 41 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை புரட்டிப்போட்ட இந்த மழை பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் டேட்டா வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த வாரம் வரை சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை குறிவைத்து பெய்த மழை தற்போது தென்தமிழகத்தை நோக்கி திரும்பி உள்ளது.

நேற்று இரவு முதல் தென்தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதியம் முதல் மாலை வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
குறிப்பாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் பேய்மழை பெய்தது. அதில் பாம்பனில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித்தீர்த்தது. பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ராமேஸ்வரத்தில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 10 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் மொத்தம் 41 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மொத்தம் 4 மணிநேரத்தில் ராமேஸ்வரத்தில் மட்டும் 36 சென்டிமீட்டர் மழை என்பது பதிவாகி உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவான கனமழை தொடர்பான டேட்டாவை ஏரியா வாரியாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
ராமேஸ்வரத்தில் இன்று மாலை 4 மணி வரையுடன் முடிந்த 10 மணிநேரத்தில் மொத்தம் 411 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தங்கச்சிமடத்தில் 322 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதுதவிர ராமேஸ்வரம் பெல்ட் பகுதியில் பெய்த வரலாற்று மழை விபரம் வருமாறு: இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ராமநாதபுரத்தில் 75 மில்லி மீட்டர், மண்டபத்தில் 261.40 மில்லி மீட்டர், ராமேஸ்வரத்தில் 411 மில்லி மீட்டர், தங்கச்சிமடத்தில் 322மில்லி மீட்டர், பாம்பனில் 237 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
வாலிநோக்கத்தில் 65.60 மில்லி மீட்டர், முதுகுளத்தூரில் 48.20 மில்லிமீட்டர், கமுதியில் 45.80 மில்லி மீட்டர், பரமக்குடியில் 25.60 மில்லி மீட்டர், திருவாடனையில் 11.80 மில்லி மீட்டர், ஆர்எஸ் மங்களத்தில் 10.40 மில்லி மீட்டர், மழை பெய்துள்ளது. ஆர்எஸ் மங்களத்தில்10.40 மில்லி மீட்டர் மழை என்பது பதிவாகி உள்ளது. தொண்டியில் மழை பெய்யவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications