சென்னை வானில் ஒரு அதிசயம்.. ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்.. அடுத்து நடந்த அற்புதம்
சென்னை: சென்னை வானில் ஒரு அதிசயம் இன்று காலை ஏற்பட்டது. ஒரே நேரத்தில் இரட்டை வானவில் தோன்றியது. காலைபொழுது விடிந்ததுமே இந்த காட்சியை கண்ட மக்கள ஆச்சர்யம் அடைந்தனர்.
கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் , மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம் அடையாறு வேளச்சேரி, மடிப்பாக்கம் , பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதேபோல் திருவல்லிக்கேணி ராயப்பேட்டை, மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சென்னையில் கடந்த இரண்டு மாதமாக நீடித்து வந்த வெப்பம் தணிந்து குளுகுளு காலநிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை மழை பெய்தால் ஒரேடியாக பெய்யும். வெயில் அடித்தாலும் ஒரேடியாக அடிக்கும்.. சென்னையில் கன மழை பெய்தால் சாலைகள் தண்ணீரில் மூழ்கி விடும். கடுமையாக வெயில் அடித்தால் வீட்டுக்குள் மின்விசிறி இல்லாமல் வாழவே முடியாது என்கிற நிலை உள்ளது. இந்த மழை சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு புறமெனில் இன்று காலை விடிந்ததுமே வானில் அரிய நிகழ்வாக இரட்டை வானவில் சென்னையில் தோன்றியது. இந்த இரட்டை வானவில்லை கருமேகங்களுக்கும் நடுவே பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
வானவில் என்பது மழை காலங்களில் தோன்றும் ஒரு சாதாரண நிகழ்வு தான் என்றாலும், சென்னையைப் பொறுத்தவரை மிக அபூர்வமாகவே வானவில் தோன்றும். அதுவும் இரட்டை வானவில் என்பது சென்னையில் மிக அபூர்வமாகவே தோன்றியுள்ளது. அந்த வகையில் இந்த இரட்டை வானவில்லும் குளுகுளு காலநிலையும் சென்னை மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications