கோவைக்கு ரெட் அலர்ட்: இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை.. கோவை குற்றாலம் அருவி மூடல்
கோவை: நீலகிரி மற்றும் கோவைக்கு அதிகன மழைக்கான எச்சரிக்கையான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவையில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால், எம்ஜிஆர் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். கன மழை காரணமாக கோவை குற்றாலம் அருவி இன்று மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக தமிழகத்தின் ஏராளமான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும், நாளையும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்துக்கு கன மழை முதல் அதி கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அந்த அறிவிப்பில், நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவையில் கன மழை
நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை நீரால் சூழ்ந்த எம்ஜிஆர் மார்க்கெட்
இந்நிலையில், கோவையில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. எம்ஜிஆர் மார்க்கெட் பகுதி முழுவதும் மழை நீரால் சூழ்ந்துள்ளது. நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக மார்க்கெட்டில் உள்ள தாழ்வான பகுதியிலிருந்த 35 கடைகளுக்குள் புகுந்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
குற்றாலம் அருவி மூடல்
கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்திற்கு மிக கன மழைக்கான (ரெட் அலர்ட்) வானிலை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று மூடப்பட்டுள்ளது.
நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்
ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஆகஸ்ட் 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications