தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. இன்று தீவிரமாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. விவரம்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடைய போகிறது, இதன் காரணமாக, தமிழகத்துக்கு 2 நாட்கள் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இந்த மழை எப்படி இருக்கும் என்றால், குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மிக அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சென்னை உள்பட வட மாவட்டங்களில் இந்த முறை பெரிய அளவில் இதுவரை பெய்யவில்லை.. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இன்னும் பல குடிநீர் ஏரிகள் வறண்ட நிலையில் தான் உள்ளன. இந்த வருடம் மழை பொய்த்து போனால் சென்னை, வரும் கோடைக்காலத்தில் பெரும் வறட்சியை சந்திக்கும் அபாயம் உள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த முறை டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதேநேரம் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த நவம்பர் 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறும் போது, "காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று காலை 8.30 மணியளவில் வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம், இலங்கை திரிகோணமலையில் இருந்து தென்கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கே 740 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கே 940 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது, வடமேற்கு திசைக்கு நகர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடற்கரையை இது நோக்கி நகரும்.
இதன்காரணமாக, இன்று காவிரி டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், நாளை (புதன்கிழமை) கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) வழங்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறதுது.
28-ந்தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 29-ந்தேதி, சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வருகிற 30-ந்தேதி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
புயல் வருமா: தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையுமா என்பது குறித்த கேள்விக்கு இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் கூறுகையில், "தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைவதற்கான வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு புயலும் ஒவ்வொரு வகையானதாக இருக்கும். கடல் வெப்பநிலை, கீழ் பகுதியில் காற்று குவிதல், மேல் பகுதியில் காற்று விரிவடையும் தன்மை மற்ற நிகழ்வுகள்தான் புயலின் தன்மையை முடிவு செய்கின்றன. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிகழ்வானது, வெவ்வேறு திசைகள், வெவ்று சாத்தியக்கூறுகளுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நிலத்துடன் தொடர்பிலும் இருக்கிறது. இதனால், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'து. இதே நிலை தொடர்ந்தால், கடலோர மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது,
மீனவர்களுக்கு எச்சரிக்கை: மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடற்கரை பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்து வரும் 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்கு திரும்பிட என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறினார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications