மழையெல்லாம் விட்டுருச்சு! கிளம்புங்க.. சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதால் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. நேற்று பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும், கடந்த 14 ம் தேதி மற்றும் நேற்று முன் தினம் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு மிக கனமழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

chennai rain weather

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வானிலை மையம் எச்சரித்தது போலவே பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் ஒரே நாளில் 30 செ.மீ மழை பெய்தது. சென்னை கொளத்தூரில் 24 செமீ மழை பதிவானது.

இதைத்தொடர்ந்து தான் நேற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் வானிலை மையம் கூறியது போல பெரிய மழை பெய்யவில்லை. காலையில் ஒருசில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. மதிய நேரங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

மதியம் 12 மணியளவில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. அதன்பிறகு வெளியான அறிவிப்பில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. ஆனால் அதன்பிறகு மழை பெய்யவில்லை. ஒரு மாதத்தில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்ததால் சென்னை மக்கள் திண்டாடி போயினர். நேற்று மழை பெய்யாமல் வெறிச்சோடியதால், தேங்கியிருந்த மழைவெள்ள நீரும் வடிந்தது. மழையும் பெய்யாததால் சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த நிலையில் தான் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காற்றழுத்தம் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமோ என மாணவர்கள் எதிர்பார்த்தன நிலையில் இந்த அறிவிப்பானது வெளியானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+