மிரட்டும் மிக்ஜாம் புயல்! திருவள்ளூர் மாவட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தியை களமிறக்கிய முதல்வர்!
சென்னை: மிக் ஜாம் புயலால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், அமைச்சர் மூர்த்தியை அந்த மாவட்டத்திற்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக களமிறக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அமைச்சர் மூர்த்தியை பொறுத்தவரை அதிகாரிகளை சற்று விரட்டி வேகமாக வேலை வாங்கக் கூடியவர் என்பதோடு இடுப்பளவு தண்ணீர் வந்தாலும் அசராமல் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களமாடக் கூடியவர்.

அதே போல் சென்னைக்கு அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சுப்ரமணியன் ஆகிய இருவரையும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளுக்காக களமிறக்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் தாமோ அன்பரசனை ஸ்பாட்டில் இறக்கிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அதேபோல் மிக் ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் சென்னையில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரை களமிறக்கியுள்ளார். அதுமட்டுமல்ல இவர்கள் அனைவரோடு தொடர்ந்து அலைபேசி மூலம் பேசி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும், மீட்பு பணிகளுக்கான தயார் நிலை குறித்தும் ஆலோசித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் 12 மாவட்டங்களுக்கு அலெர்ட் கொடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் முதல் வருவாய் துறை அலுவலர்கள் வரை புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மிக் ஜாம் புயலை பொறுத்தவரை சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 310 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாளை காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோர பகுதிகளை அடைந்து நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டிணத்திற்கு இடையே 5ஆம் தேதி கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் திருவள்ளூர் மற்றும் சென்னை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக் கூடும் என்பதால் நேற்று முதலே அரசு இயந்திரம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications