சென்னையில் மழைநீரில் மூழ்கிய தண்டவாளங்கள்.. புறநகர் ரயில்கள் தாமதம்! விமான சேவை பாதிப்பு
சென்னை: சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. அதேபோல விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும், வடகிழக்கு பருவமழை காரணமாவும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்கள் போதுமான அளவு மழையை பெற்றிருக்கின்றன. இதனால் அணைகள், ஏரி, குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணை மற்றும் ஏரியிலிருந்து நீர் திறக்கப்படுவதால் கரையோரம் இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மழை அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

சென்னையை பொறுத்த அளவில் கடந்த 4 மணி நேரத்தில் சராசரியாக 6.7 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இதனால் சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை உட்பட 5 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. எனவே போக்குவரத்து இந்த வழியாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. புறநகர் பகுதியை பொறுத்த அளவில் செங்குன்றம் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
மழை பொழிவை பொறுத்த அளவில் அதிகபட்சமாக கொரட்டூரில் 62.4 மி.மீ, அம்பத்தூரில் 54.3 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்துள்ளது. அதேபோல ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை சென்டரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. புனேவிலிருந்து சென்னை வந்து சேர வேண்டிய விமானங்கள் தாமதமாகியுள்ளன. சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாகியுள்ளன.
சென்னையில் நள்ளிரவு வரை கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால், மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனடியாக களத்துக்குச் சென்று பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மழையால் பாதிக்கப்படுபவர்கள் அணுக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 04425619204, 04425619206, 04425619207 என்கிற எண்ணிலும், +91 94454 77205 என்கிற வாட்ஸ்அப் எண் மற்றும் 1913 என்கிற எண்ணிலும் உதவி தேவைப்படுவோர் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications