"சம்மர் ரிட்டர்ன்ஸ்".. தமிழ்நாட்டை வாட்டி எடுக்கும் 2வது கோடை.. என்ன நடக்குது வானிலையில்.. ஷாக்கிங்
சென்னை: தமிழ்நாட்டில் கோடைகாலம் அதிகாரபூர்வமாக முடிந்துவிட்ட நிலையில் கிட்டத்தட்ட இரண்டாவது கோடைகாலம் வாட்டி எடுத்துக்கொண்டு இருக்கிறது.
கோடைகாலம் முடிந்த பின்பும் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 41ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அர்த்தம் வரும் நாட்களில் வெப்பம் கொளுத்த போகிறது. இன்று தமிழ்நாட்டில் 41 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமான சென்னை போன்ற கடலோர மாவட்டங்களிலும் வேலூர் போன்ற உள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் உச்சத்தில் இருக்கும்.

வரும் நாட்களில் வெப்பநிலை பல மாநிலங்களில் 100 டிகிரி பேரன்ஹீட்டை தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சம்மர் ரிட்டர்ன்ஸ் ஏற்பட்டு உள்ளது. இதில் இருந்து உடனடி தீர்வு இல்லை.இன்றும் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெயில் அடிக்க போகிறது. இயல்பை விட அதிக வெப்பம் இருக்க போகிறது. சென்னையில் 38 - 39 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவும். கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யலாம் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை அறிவிப்பு: இந்த நிலையில், தமிழ்நாடு வானிலை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 07.08.2023 முதல் 08.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.08.2023 முதல் 11.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: 06.08.2023 மற்றும் 07.08.2023: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்) 3, வொர்த் எஸ்டேட் செருமுள்ளி (நீலகிரி) 2, வால்பேட்டை (கடலூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), நடுவட்டம் (நீலகிரி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்:
05.08.2023 மற்றும் 07.08.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
07.08.2023:இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 08.08.2023:மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அரபிக்கடல் பகுதிகள் எச்சரிக்கை ஏதுமில்லை.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள், என்று கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications