‛‛இன்று ஆரஞ்சு அலர்ட்’’.. தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் மிக கனமழை! லிஸ்ட் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மே மாதம் 5ம் தேதிக்கு பிறகு தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. தற்போது கோடை மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே தான் கோடை மழையால் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது. அதன்படி தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், மாலத்தீவின் பல பகுதிகள், குமரிக்கடல், தெற்கு வங்கக்கடல், அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.
தென்மேற்கு பருவமழை: அதுமட்டுமின்றி கேரளாவில் முன்கூட்டியே ஜூன் 1ல் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஜுன் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆரஞ்சு அலர்ட்: தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட்டை பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 6 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கோவை- நீலகிரி: இதுதவிர தமிழகத்தில் இன்று திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது எனவும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. அதோடு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி: மேலும் வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும். பிறகு மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25ம் தேதி மாலை நிலவும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இதனால் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு வருகிற மே 26ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications