கோவை, நீலகிரி மட்டுமல்ல.. இந்த மாவட்ட மக்களும் நைட் வெளியே வராதீங்க! கொட்டப்போகும் மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்து வருகிறது. அதே நேரம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாலும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், இரவு 1 மணி வரை 18 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் இரவில் மக்கள் அவசியமின்றி வெளியில் நடமாட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில்,

Tamil Nadu rain chennai
  • நீலகிரி
  • கோவை
  • திருப்பூர்
  • ஈரோடு
  • தேனி
  • திண்டுக்கல்
  • தென்காசி
  • ராமநாதபுரம்
  • விருதுநகர்
  • திருநெல்வேலி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி

ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஆரஞ்சு எச்சரிக்கையின்போது 24 மணி நேரத்தில் 115.6 மி.மீ - 204.4 மி.மீ அளவுக்கு மழை பெய்யும். இதனால் வீடுகளில் தண்ணீர் புகும். சாலைப் போக்குவரத்து பாதிப்படையும். மலைப்பகுதிகளில் மண் சரிவு அபாயம் ஏற்படும். ஆரஞ்சு எச்சரிக்கையின்போதும் கவனமாக இருப்பது முக்கியம்.

  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • தஞ்சாவூர்
  • திருவாரூர்
  • நாகப்பட்டினம்
  • மயிலாடுதுறை

மாவட்டங்களுக்கு லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. மஞ்சள் அலர்ட் எனில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த எச்சரிக்கையின்போது 64.5 மி.மீ - 115.5 மி.மீ என மழை பெய்யும். இது சாதாரண மழை அளவுதான். சிறிய அளவில் வெள்ளம் ஏற்படலாம். அதுவும் மிகவும் அபூர்வம்தான். சாலைகளில் தண்ணீர் தேங்கும். மற்றபடி இந்த அளவு மழை விவசாயத்திற்கு தேவையானதுதான்.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், "இன்று, தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி 27-ஆம் தேதி வாக்கில் (நாளை) உருவாகக்கூடும்.

எனவே நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மே.29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே.31 மற்றும் ஜூன்-1ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+