கவனம்! இந்த பக்கம் மழை தொடங்கியதும்.. மின்சார வாரியம் இப்படி ஒரு ஆர்டர் போடுதே! ரொம்ப முக்கியம்!
சென்னை; வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழ்நாடு மின்சாரத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் இன்றில் இருந்து காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்ய உள்ளது. புதிதாக புயல் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு மற்றும் மாலை நேரங்களில் சென்னை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.

இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்யும்.
மழை பெய்யும்: இந்த வடகிழக்கு பருவமழையை தமிழ்நாட்டில் பொதுவாக நல்ல மழை பெய்யும். ஆனால் இந்த மாதம் பெரிதாக மழையே இல்லாமல் பொய்த்துவிட்டது. தீபாவளி நாளில் எல்லாம் இவ்வளவு வெயில் அடித்ததே இல்லை. ஆனால் இந்த முறை பெரிதாக மழையே இல்லை. இந்த நிலையில்தான் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14-ஆம் தேதி வாக்கில் உருவாகும் நிலையில் மழை தீவிரம் அடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மின் வாரியம் அதிரடி நடவடிக்கை; வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் காரணமாக தமிழ்நாடு மின்சாரத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது.
பொதுவாக கனமழை மற்றும் சூறாவளி போன்ற சமயங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் நிறுத்தப்படும் என்றாலும், மின்சார விநியோகத்தில் தடங்கலைத் தவிர்ப்பதற்காக, பருவமழைக்கு முந்தைய தயார்நிலை நடவடிக்கைகளை மின்சாரத்துறை அதிகாரிகள் எல்லா வருடமும் மேற்கொள்வார்கள். இந்த ஆண்டும் மின்சாரத்துறை தூண் பெட்டிகளின் உயரத்தை அதிகரிப்பது, மேல்நிலை மின் கம்பிகள் அறுந்து விழும் மரக்கிளைகளை கண்டறிந்து கத்தரிப்பது, சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுவது, ஜம்பர்கள், கண்டக்டர்கள் மற்றும் சுவிட்சுகள் போன்ற புதிய மின் சாதனங்களை நிறுவுவது என பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மழை காலத்தில் மின்சாரம் தடை இன்றி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த பணிகளை மின்சாரத்துறை மேற்கொள்ள தொடங்கி உள்ளது.
ஸ்டாலின் உத்தரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி மிகப்பெரிய அளவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. ஸ்டாலின் உத்தரவின்படி இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டு அக்டோபர் இறுதிக்குள் முடிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட பணிகளின் ஒரு பகுதியாக, கிட்டத்தட்ட 10 லட்சம் உபகரணங்கள், சுவிட்சுகள் மற்றும் மின்கம்பங்கள் மாற்றப்பட்டன, இது சமீபத்திய மாதங்களில் பெய்த கனமழையின் போது தடையின்றி மின்சாரம் வழங்க உதவியது. நகரத்தில் கிட்டத்தட்ட 46,000 பணிகள் மேற்கொள்ளப்பட்டன, இது மாநிலத்திலேயே மிக அதிகமாகும்.

இதையடுத்து தற்போது மேலும் பணிகளை செய்ய தொடங்கி உள்ளனர். சென்னையில், வழக்கமான விநியோக மின்மாற்றிகளை ரிங் மெயின் யூனிட்டுகளாக (RMUs) மாற்றியதன் காரணமாகவும், தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளில் மின்சாரம் கசிவைத் தடுக்க மின்மாற்றிகள் மற்றும் தூண் பெட்டிகளின் அடிப்படை உயரத்தை அதிகரிப்பதாலும் மின்சாரத்துறை தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளது. வடக்கு, மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் தெற்கு 2 ஆகிய ஐந்து வட்டங்களை உள்ளடக்கிய 77 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் இந்த மழை காலத்தில் கண்டிப்பாக மின் தடை இருக்காது என்று மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications