பிரதமர் மோடியுடன் முதல்வர் முக ஸ்டாலின் சந்திப்பு.. வைத்த கோரிக்கைகள் என்னென்ன?
சென்னை: மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு உரிய வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் சந்தித்தார்.
மிக்ஜாம் புயலானது சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாடு மாவட்டங்களை வெள்ளத்தில் மிதக்க விட்டது. இதனைத் தொடர்ந்து குமரிக்கடல் பரப்பின் வளிமண்டல சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெருமழை கொட்டித் தீர்த்தது. வரலாறு காணாத இந்தப் பெருமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. காயல்பட்டினத்தில் நூற்றாண்டு காணாத வகையில் ஒரே நாளில் 95 செமீ மழை- அதாவது ஓராண்டு முழுவதும் பெய்யக் கூடிய பெருமழை கொட்டித் தீர்த்தது.

தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முப்படைகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது. விமானப் படை ஹெலிகாப்டர்கள், கப்பற்படை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அமைச்சர்கள் பலரும் இந்த பணிகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளனர்.
இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், பிரதமர் மோடியை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை இன்று இரவு 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். தமிழ்நாடு வெள்ள பாதிப்பு குறித்து உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்த உள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலையைப் பற்றி எடுத்துரைத்தேன். நடைபெற்று வரும் மீட்புப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும், முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி வேண்டி கோரிக்கை மனுவை அளித்தேன். இத்தகைய கடினமான காலத்தில் தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிந்தமைக்குப் பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications