சென்னை மக்களுக்கு.. செல்போனில் போன அவசர மெசேஜ்.. பேரிடர் மேலாண்மை அனுப்பிய முக்கிய தகவல்.. என்ன?
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பெய்ய கூடும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என்று TNSDMA மக்களுக்கு மெசேஜ் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து இந்த எச்சரிக்கையை அனுப்பி உள்ளது.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, மேம்படுத்தவும், பேரிடர்களின் போது பொதுமக்களின் அவசரகால பாதுகாப்பு தகவல்தொடர்புகளை மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை ஓட்டம் கடந்த வருடம் நடத்தப்பட்டது.

"செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" தொழில்நுட்பமாகும். இதில் ஒரு முறை என்பது ஒரு அதிநவீன செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி ஆகும்.
மழை: சற்று நேரத்திற்கு முன் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் தமிழ்நாட்டில் மழை தீவிரம் அடைந்து உள்ளது. இது இனி கொஞ்சம் கொஞ்சமாக சென்னை, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா நோக்கி நகரலாம். இதனால் இன்று பெய்ய வேண்டிய மிக கனமழை நாளை பெய்யும். அதாவது இன்றும் மழை பெய்யும். ஆனால் ரெட் அலர்ட் அளவிற்கு பெய்யுமா என்பது சந்தேகம்தான். அடுத்த 2 நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமை அடையும்.
எப்போது சென்னைக்கு வரும்?: இந்த தாழ்வு மையம் சென்னைக்கு அருகே நாளை மாலை நேரத்தில் வரலாம். நாளை மாலை நேரத்தில் சென்னைக்கு அருகே நின்று மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.
தற்போது தாழ்வு மையம் எங்கே உள்ளது என்று இங்கே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போது இலங்கைக்கு வடகிழக்கு பகுதியில் இந்த தாழ்வு மையம் உள்ளது. இந்த தாழ்வு மையம் காரணமாக மேகங்கள் பேண்ட் பேண்ட்டாக வர தொடங்கி உள்ளது. மொத்தமாக மேகம் வராமல்.. கொஞ்சம் கொஞ்சமாக வர தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து 360 கிமீ தூரத்திற்கு அதிகமான தூரத்தில் இந்த தாழ்வு மையம் உள்ளது.
இந்தியாவில் கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (எ.கா., சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்றவை) பொதுப் பாதுகாப்புச் செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" பயன்படுத்தப்படுகிறது. இத்தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பில் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களிடம் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" அமைப்பின் சோதனையினை கடந்த ஆண்டு செய்தது.
இந்த நிலையில்தான் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பெய்ய கூடும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என்று TNSDMA மக்களுக்கு மெசேஜ் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து இந்த எச்சரிக்கையை அனுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications