ஹப்பா.. இதைத்தான் மக்கள் எதிர்பார்த்தாங்க.. சென்னை வெள்ளத்திற்கு பின்.. அரசு எடுத்த முக்கிய முடிவு
சென்னை: சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் புயல் தாக்குதலுக்கு இடையில் தமிழ்நாடு அரசு முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
மிக்ஜாம் புயலை தொடர்ந்து சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு.. தற்போது பெரும்பாலான இடங்களில் தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வெள்ளம் இன்றி காணப்படுகிறது. அதேபோல் சாலையின் உட்பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது.

ஆனால் ஒரு சில ஏரியாக்கள் இன்னும் வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவில்லை. மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், ஐடி ஏரியா பகுதிகள் மொத்தமாக இன்னும் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. இந்த பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்கவில்லை. இப்போதும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கே வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளம் வடியாத பகுதிகள்: கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.
மீளும் சென்னை: மேலும் இது 2015ஐ விட மோசமான வெள்ளம். 2015ஐ விட மோசமான மழை. ஆனாலும் சென்னை மறுநாளே வேகமாக மீண்டு வந்தது. பல ஏரியாக்கள் மிக வேகமாக மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தது. சென்னை இப்படி சட்டென எழுந்து நிற்க ஒரே காரணம்.. இந்த வடிகால் அமைப்புகள்தான்.
வெள்ள பாதிப்பு: சென்னையில் வெள்ளத்தால் மக்கள் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு பல விதமான முகாம்களை, சேவைகளை செய்து வருகிறது. இன்று தமிழ்நாடு அரசு தொடங்க போகும் முகாம் ஒன்று மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
முக்கியமான முடிவு; சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் புயல் தாக்குதலுக்கு இடையில் தமிழ்நாடு அரசு முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி சென்னையில் சேதம் அடைந்த சாலைகளை சரி செய்யும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.

பயன்படுத்தவே முடியாத அளவிற்கு சென்னையில் பல்வேறு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. முக்கியமாக மெயின் சாலைகள் தவிர்த்து தெருக்கள் உள்ளே இருக்கும் சாலைகள் மோசமாக சேதம் அடைந்து உள்ளன. இந்த சாலைகளை சரி செய்யும் முடிவை எடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. இதற்காக சாலையை மில்லிங் செய்ய முடிவு செய்துள்ளனர்.
சாலை சீரமைப்பு தேவைப்படாத இடங்களை பேட்ச் செய்யும் முடிவை எடுத்துள்ளனர். இந்த வாரத்தில் இருந்து இதற்கான பணிகள் தொடங்கும் என்கிறார்கள். இந்த சாலை நிலையால் மக்கள் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications