இது டிசம்பர் இல்லை.. எனவே சென்னை மழை ரொம்ப அரிதானது! தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்த முக்கிய அப்டேட்
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இந்த நிகழ்வு அரிதானது என்றும் இருப்பினும் நவம்பர், டிசம்பர் மாதங்களை போல மழை தீவிரமாக இருக்காது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில்தான் கோடை வெயில் தொடங்கும். ஆனால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிப்ரவரி இறுதியில் வெயில் தொடங்கிவிட்டது. மார்ச்சில் ஏற்றம் கண்ட வெயில், ஏப்ரலில் உச்சத்தை தொட்டது. எனவே பரவலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருந்தது.

குறிப்பாக ஈரோடு, கோவை, கரூர் என கொங்கு மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், திருத்தணி என வட மாவட்டங்களில் வெயில் 105 டிகிரிக்கு அதிகமாக பதிவாகியிருந்தது. இதனால் இம்மாவட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். குறிப்பாக சென்னை மக்கள் அதிக அளவில் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். எனவே ஏசி விற்பனை எக்குதப்பாக எகிறியது.
இப்படி இருக்கையில் தற்போது கோடை மழை தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் தென் மாவட்டங்களில் தலையை காட்டிய மழை, கொஞ்சம் கொஞ்சமாக வட மாவட்டங்களை நோக்கி ஏற தொடங்கியது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னையிலும் மழை பெய்திருந்தது. இதனால் சென்னையின் வெப்பநிலை குறைந்திருக்கிறது.
இந்த கோடை மழை அரிதானது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார். அதாவது, "இந்த ஆண்டு சென்னையின் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை தாண்டவில்லை. இது ஒரு வரம். கோடை மழை சென்னையை குளிர்வித்திருக்கிறது. இன்றும் சென்னையில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
கோடையில் சென்னையில் மழை பெய்வது என்பது அரிதானது. வெப்ப சலனத்தால் இந்த மழை பெய்திருக்கிறது. சென்னையை பொறுத்த வரை கோடையில் மழை பெய்ய வேண்டும் எனில், தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருக்க வேண்டும். அல்லது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் இல்லாமல் மழை பெய்வது என்பது மிக மிக அரிதாகவே நடக்கும். எனவே இந்த மழையெல்லாம் சென்னைக்கு போனஸ்தான்.
இருப்பினும் இது நவம்பர், டிசம்பர் போல கனமழையை கொடுக்காது. எனவே அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம்" என்று கூறி கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பெய்த மழையின் அளவை பகிர்ந்திருக்கிறார். அதன்படி, இன்று காலை வரை தோராயமாக 10 மி.மீ வரை மழை பொழிந்திருக்கிறது. இதில்,
மாதவரம் - 22 மி.மீ
நந்தனம் - 20 மி.மீ
கோடம்பாக்கம் - 17 மி.மீ
கேளம்பாக்கம் - 16 மி.மீ
புழல் - 15 மி.மீ
ரெட்ஹில்ஸ் - 14 மி.மீ
ஐஸ் ஹவுஸ் - 11 மி.மீ
ராயபுரம் - 11 மி.மீ
மகாபலிபுரம் - 11 மி.மீ
கொளத்தூர் - 10 மி.மீ
நேற்றும் சராசரியாக 10 மி.மீ அளவில் மழை பொழிந்திருக்கிறது. அதாவது,
சத்யபாமா பல்கலைக்கழகம் - 51 மி.மீ
சோழிங்கநல்லூர் - 25 மி.மீ
திரு.வி.க நகர் - 18 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் - 16 மி.மீ
உத்தண்டி - 15 மி.மீ
வண்டலூர் - 13 மி.மீ
நந்தனம் - 13 மி.மீ
பெருங்குடி - 12 மி.மீ
மகாபலிபுரம் - 12 மி.மீ
கோடம்பாக்கம் - 11 மி.மீ
தேனாம்பேட்டை - 11 மி.மீ
அண்ணா நகர் - 10 மி.மீ
17ம் தேதியை பொறுத்த அளவில் சராசரியாக 10 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது.
மகாபலிபுரம் AWS - 81 மி.மீ
மாம்மல்லபுரம் - 64 மி.மீ
திருப்போரூர் - 26 மி.மீ
மாதவரம் - 23 மி.மீ
திருக்கழுகுன்றம் - 16 மி.மீ
மணலி - 15 மி.மீ
உத்தண்டி - 11 மி.மீ
சோழிங்கநல்லூர் - 10 மி.மீ
குன்றத்தூர் - 10 மி.மீ
வண்டலூர் - 10 மி.மீ
செங்கல்பட்டு - 10 மி.மீ
என மழை பதிவாகியுள்ளது. இன்றும் சென்னையின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்பதால், வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications